சேரன் கையில் இருந்து நழுவி போன மொக்கை சீரியல்.. அதிர்ஷ்டவசமாக அய்யனாரில் கலக்கும் மேஸ்திரி

Ayyanar Thunai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தற்போது அனைவரும் விரும்பி பார்க்கக்கூடிய சீரியலாக மக்கள் மனதை கவர்ந்தது அய்யனார் துணை சீரியல்தான். இதற்கு காரணம் அண்ணன் தம்பிகளின் நடிப்பும் எதார்த்தமான கதையும் கொண்டு வந்து மக்களை உணர்வுபூர்வமாக தாக்கி வருகிறது.

என்னதான் வானத்தைப்போல, சமுத்திரம் போன்ற படங்களில் அண்ணன் தம்பிகளின் பாசத்தை பார்த்திருந்தாலும் அய்யனார் துணை சீரியல் ஒரு புதுவிதமான உணர்வை கொடுக்கிறது என்று மக்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். அதனால் தான் டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறது.

முக்கியமாக இதில் சேரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்னா என்னும் நடிகர் யதார்த்தமான நடிப்பு தான் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. இவர் இதற்கு முன் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் தற்போது சேரன் கதாபாத்திரம் மூலம் இவருக்கு என்று சின்னத்திரையில் தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

அப்படிப்பட்டவர் சமீபத்தில் கொடுத்த ஒரு இன்டர்வியூவில் சொன்ன விஷயம் என்னவென்றால் விஜய் டிவியில் இருந்து இவருக்கு நடிப்பதற்கு வேறு ஒரு சீரியல்தான் கிடைத்ததாம். அதாவது சின்னத்திரை நாயகன் திரவியம் நடித்து வரும் சிந்து பைரவி சீரியலில் சிவா நடிக்கும் டாக்டர் கேரக்டரில் நடிப்பதற்கு தான் சேரன் வந்து ஆடிஷன் செய்து இருக்கிறார்.

ஆடிசன் எல்லாம் முடிந்ததும் கடைசி நிமிடத்தில் தான் தெரிகிறது இந்த வாய்ப்பு என்னிடமிருந்து கைநழுவி போய்விட்டது என்று. எனக்கு பதிலாக திரவியம் நடிக்கப் போகிறார். அதன் பின் எனக்கு போன் பண்ணி உங்களுக்கு வேறு ஒரு நாடகம் காத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லி டாக்டர் கேரக்டரில் இருந்து மேஸ்திரி கேரக்டரை கொடுத்து விட்டதாகவும் அதன் மூலம் தான் அய்யனார் துணை சீரியலில் சேரன் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

ஆனால் ஒரு விதத்தில் அந்த வாய்ப்பு அவரிடம் இருந்து கைநழுவி போனது நல்லதுக்கு தான். ஏனென்றால் எதிர்பார்த்த அளவுக்கு சிந்து பைரவி சீரியல் மக்களிடம் ரீச் ஆகவில்லை, சிவா கேரக்டரும் பெருசாக பேசவிடவில்லை. ஆனால் அந்த வாய்ப்பு நழுவி போயி அய்யனார் துணை சீரியலில் மேஸ்திரி ஆக நடிக்கும் சேரன் தான் அனைவரது ஃபேவரிட் நாயகனாக இடம் பிடித்திருக்கிறார். இந்த வகையில் முன்னாவுக்கு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம்.