Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், ரகுராம் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று புவனேஸ்வரி கார்த்திக்கை மறைத்து வைத்து ஜானகி மீது கொலை பழியை போட்டு ஜெயிலுக்கு அனுப்ப முயற்சி பண்ணினார். ஆனால் கார்த்திக் உயிருடன் தான் இருக்கிறார் என்ற விஷயம் மாயாவுக்கு தெரிந்த நிலையில் எப்படியாவது கார்த்திக்கை கோர்ட்டில் நிறுத்த வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார்.
அந்த வகையில் மாயாவுக்கு சப்போர்ட்டாக கதிர் நின்றார். தலைமறைவாக இருக்கும் கார்த்திக் எப்படியாவது வெளிவர வேண்டும் என்றால் புவனேஸ்வரி இறந்துவிட்டதாக கார்த்தி கண்ணில் படும் வரை நோட்டீசை ஒட்டவேண்டும் என்று மாயா பிளான் பண்ணினார். அதன்படி கதிர் மற்றும் மாயா புவனேஸ்வரிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி நோட்டீசை ஒட்டிவிட்டார்.
அதை பார்த்த கார்த்திக், அத்தை இறந்து விட்டதாக நினைத்து அத்தையை பார்ப்பதற்காக ஆட்டோவில் ஏறினார். இதை நோட் பண்ணிய மாயா மற்றும் கதிர் போலீசை வரவழைத்து கார்த்திக்கை பிடித்து விட்டார்கள். அடுத்ததாக ஜானகி மீது கொலை வழக்கு போட்டு ஜட்ஜ்மெண்ட் பார்க்க வந்த அனைவரும் ஜானகி நிரபராதி என்று சொல்லும் அளவிற்கு ஆதாரம் எதுவும் இல்லாமல் போய்விட்டது.
அந்த வகையில் ஜானகி மீது குற்றம் செலுத்தி தண்டனை ஜட்ஜ் கொடுக்கும் பட்சத்தில் மாயா கோர்ட்டுக்கு வந்து விடுகிறார். அங்கே போலீஸ் கார்த்திக்கு உயிருடன் கூட்டிட்டு வருவதை பார்த்து புவனேஸ்வரி அதிர்ச்சி ஆகிவிட்டார். ரகுராமும் கார்த்திகை பார்த்த நிலையில் அப்படி என்றால் மாயா சொன்ன அனைத்துமே உண்மைதான். கதிரும் குற்றவாளி இல்லை, ஜானகியும் நிரபராதி என்று ரகுராம் புரிந்து கொண்டார்.
இதன் பிறகு மாயா மற்றும் கதிரை ரகுராம் ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கார்த்திக் எந்த அளவுக்கு மோசமானவர் என்பதையும் ரகுராம் புரிந்து கொண்டு அதற்காகத்தான் மாயா, கார்த்திக்கு பதிலாக கதிரை வைத்து தனத்தின் கழுத்தில் தாலி கட்டினார் என்ற விஷயம் எல்லாம் ரகுராமுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரியப் போகிறது. இதனால் சீனுவும் மாயாவை புரிந்து கொண்டு மனதார ஏற்றுக் கொள்வார்.