இந்த வார டிஆர்பி ரேட்டிங்.. சிறகடிக்க ஆசை தொடரை பின்னுக்கு தள்ளிய சன் டிவி

Serial TRP : ஒவ்வொரு வாரமும் சுவாரசியமான கதைகளத்துடன் தொடர்கள் ஒளிபரப்பாகி வருவதால் டிஆர்பியில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அந்த வகையில் இந்த வாரம் என்னென்ன தொடர்கள் எந்த இடம் பெறுகிறது என்பதை பார்க்கலாம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் 2 தொடர் 6வது இடத்தில் இருக்கிறது. இப்போது குணசேகரன் மற்றும் அவரது தம்பிகளின் மாற்றத்தால் தொடர் சூடு பிடித்து உள்ளது. 7.15 புள்ளிகள் ரேட்டிங்கை எதிர்நீச்சல் 2 தொடர் பெற்று இருக்கிறது.

அடுத்ததாக 5வது இடத்தில் மருமகள் தொடர் உள்ளது. இதில் கதாநாயகி இப்போது தான் வாட்டர் பிசினஸ் ஆரம்பித்திருக்கிறார். அதில் பல சிக்கல்கள் வர உள்ளது. இந்த தொடர் 8.05 புள்ளிகள் ரேட்டிங்கை பெற்றிருக்கிறது.

இந்த வாரம் சீரியல்களின் டிஆர்பி

நான்காவது இடத்தை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடர் பெற்று இருக்கிறது. இதில் மாமியார் விஜயா மருமகள் ரோகிணியை வாட்டி வதைத்து வருகிறார்.

சன் டிவியில் கயல் சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதில் இப்போது கதாநாயகனுக்கு தொழில் தொடங்க கயல் முயற்சி செய்கிறார். இத்தொடர் 8.67 ரேட்டிங் பெற்றிருக்கிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு தொடர் இந்த முறை இரண்டாவது இடத்தில் இருக்கிறது. சுவாரஸ்யமான கதை களத்தால் 9.24 ரேட்டிங் பெற்றிருக்கிறது.

முதல் இடத்தையும் சன் தொலைக்காட்சி தான் பெற்றிருக்கிறது. எதிர்பாராத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் 9.65 ரேட்டிங் பெற்று இருக்கிறது.