Serial Trp rating list: சின்னத்திரை மூலம் மக்கள் மனதை கொள்ளை அடித்த சீரியல்களில் எது பெஸ்ட் என்பதை ஒவ்வொரு வாரமும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தை பிடித்த சீரியல்கள் எதுவென்று ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.
மருமகள்: ஆதிரை தன்னுடைய நாத்தினாரை காணவில்லை என்று தேவா மீது சந்தேகப்பட்டு தேவாவின் ஆபீசுக்கு போய் பிரச்சனை பண்ணுகிறார். ஆனால் தேவா நான் கடத்தவில்லை என்று சொல்லிய நிலையில் அங்கு வந்தவர் நீங்க சொன்னபடி அந்த பொண்ண கடத்தி ஆச்சு என்று சொல்கிறார். அந்த வகையில் தேவா தான் இதற்கெல்லாம் காரணம் என்று ஆதிரைக்கு தெரிந்து விடும். இருந்தாலும் ஆதிரையின் நாத்தனார் ரோகிணி காணாமல் போயிருக்க வாய்ப்பில்லை. டிஆர்பி ரேட்டிங்கில் 7.91 புள்ளிகளைப் பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
சிறகடிக்கும் ஆசை: பொய்யும் பித்தலாட்டமும் பண்ணி வந்த ரோகினி பற்றிய சில உண்மைகள் வெளிவந்தாலும் அது பெரிய பூகம்பமாக வெடிக்காமல் புஸ்வானமாக போய்விட்டது. அதனால் இந்த நாடகத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு குறைய ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் தட்டு தடுமாறி இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 7.93 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.
கயல்: சிவசங்கரிடம் விட்ட சவாலில் எழிலை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதற்காக கயல் மற்றும் குடும்பத்தில் இருப்பவர்கள் பணத்திற்காக போராடுகிறார்கள். அந்த வகையில் மூர்த்தி மூலமாக வந்த பணத்தையும் கயல் வேண்டாம் என்று மறுத்து விடுகிறார். பிறகு சம்பளத்திற்காக வீட்டு வேலை பார்ப்பதற்கு கயல் துணிந்து விட்டார் விட்டார். டிஆர்பி ரேட்டிங்கில் இந்த வாரம் 8.51 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
மூன்று முடிச்சு: நந்தினிக்கு மறைமுகமாக சுந்தரவல்லி பிரச்சனை கொடுத்திருக்கிறார். அதே மாதிரி கிராமத்தில் இருக்கும் நந்தினி குடும்பத்தையும் தொந்தரவு செய்தார். இதை எல்லாம் சரி செய்யும் விதமாக நந்தினி மாமனார் மற்றும் சூர்யா இருவரும் சேர்ந்து நந்தினியின் குடும்பத்தை சென்னைக்கு கூட்டிட்டு வந்து அவர்கள் தங்குவதற்கு ஒரு நல்ல வீடு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.05 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
சிங்க பெண்ணே: தன் கர்ப்பமாக இருக்கிறோம் என்று ஆனந்திக்கு தெரிந்ததிலிருந்து யார் காரணம் என்று தெரியாமல் பித்து பிடித்தது போல் அலைகிறார். அதனால் தன்னால் சுற்றி இருப்பவர்களுக்கும் குடும்பத்திற்கும் எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்று முடிவெடுத்த ஆனந்தி தற்கொலைக்கு தயாராகி விட்டார். ஆனந்தி எடுத்த முடிவை புரிந்து கொண்ட தோழிகள் ஆனந்தியை கூப்பிட்டு கண்டிக்கிறார்கள். அப்பொழுது ஆனந்தி கர்ப்பம் என்ற உண்மையை தோழிகளிடம் சொல்கிறார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.28 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்திருக்கிறது.