Top Cook And Doop Cook: ‘ரியாலிட்டி ஷோ’ மூலம் தான் விஜய் டிவி சேனல் மக்களிடம் பிரபலமானது, இந்த லிஸ்டில் அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளை மறக்கவே முடியாது. அந்த அளவிற்கு மக்களுக்கு என்டர்டைன்மெண்டாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளியும் மக்கள் மனதை கவர்ந்தது. பொதுவாக பக்கத்து வீட்டில் சண்டை நடந்தால் நாம் இருக்கிற வேலையை விட்டு, எட்டிப் பார்ப்பது வழக்கம்.
அதுவே தினமும் வீட்டில் இருந்தபடியே பார்த்து ரசிக்கும்படியாக இருந்தால் சும்மா விடுவோமா, அப்படித்தான் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களுக்கு ஒரு பொழுதுபோக்காக இருந்தது. அதனால் தொடர் வெற்றிகளையும் கொடுத்தது, இந்த வரிசையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் இணைந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாலும் அதிகம் உண்டு. காரணம் சமைப்பதற்கு போட்டியாளர்கள் வந்தாலும் அவர்கள் செய்யும் டாஸ்க்களை செய்யவிடாமல் தடுப்பதற்கு கோமாளிகளையும் கொடுத்து வித்தியாசமான நிகழ்ச்சியாக அமைந்தது.
அதனால் தான் சீசன்6 வரை தற்போது ஒளிபரப்பாகி வருகிறது, இதற்கிடையில் எவ்வளவு சர்ச்சைகள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி வெற்றியுடன் இருக்கிறது. மேலும் ஆரம்பித்த சீசன் 6 முடியும் தருவாயில் இருக்கிறது. ஆனால் இதற்குப் போட்டியாக சன் டிவியில் ஆரம்பித்த டாப் குக் டூப்பு குக்கு சீசன் 2 ஆரம்பிக்கவில்லை.
காரணம் இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த பொழுது விஜய் டிவியிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி 5 ஒளிபரப்பியதால் மக்கள் முழு ஆதரவையும் விஜய் டிவிக்கு தான் கொடுத்திருந்தார்கள். அதனால் பெருசாக சொல்லும்படி டாப் குக் டூப்பு குக்கு 1 வெற்றி பெற முடியவில்லை.
இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் சன் டிவி போட்ட ஸ்கெட்ச் என்னவென்றால் விஜய் டிவியில் வரும் குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சி முடிந்தவுடன் டாப் குக் டூப்பு குக்கு 2 ஆரம்பித்து விடலாம் என்று பிளான் பண்ணியிருக்கிறார்கள்.
அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் இறுதியில் ஆரம்பிக்கப்படுவதாக தகவல் வெளியாயிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியிடப்படும் என்று வெங்கட் பட் அவருடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து இதில் கலந்து கொள்ள போட்டியாளர்கள் யார் என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.