டிஆர்பி ரேஸில் டாப் யார்? சீரியல்களின் புதிய ரேட்டிங் நிலவரம்!
சமீபத்திய டிஆர்பி ரேட்டிங் நிலவரப்படி, சன் டிவியின் சீரியல்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன.
சின்னத்திரை உலகில் ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங் வெளியாவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். இந்த ரேட்டிங், தொலைக்காட்சி சேனல்களுக்கும், சீரியல் தயாரிப்பாளர்களுக்கும் அடுத்த கட்ட வியூகங்களை அமைப்பதற்கான முக்கியமான தரவுகளாக அமைகின்றன
வழக்கம்போல், சன் டிவியின் 'மூன்று முடிச்சு' சீரியல் இந்த வாரமும் டிஆர்பி பட்டியலில் அசைக்க முடியாத முதலிடத்தைத் தக்கவைத்து இருக்கிறது. இதன் பரபரப்பான கதையம்சம், குடும்பப் பார்வையாளர்களைத் தொடர்ந்து கவர்ந்திழுத்து வருகிறது.
கடந்த வாரம் 9.65 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் மேலும் முன்னேறி 10.62 புள்ளிகள் பெற்று தனது இடத்தை உறுதி செய்துள்ளது. இது, பல மாதங்களாகவே சீரியல்களின் டிஆர்பி ரேஸில் உச்சத்தில் நீடிக்கும் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.
மனிஷா மகேஷ் நடிப்பில் ஒளிபரப்பாகும் 'சிங்கப்பெண்ணே' சீரியல், குடும்ப உறவுகள் மற்றும் லட்சியப் பெண்களை மையப்படுத்திய கதையால், இரண்டாவது இடத்தைத் தக்கவைத்துள்ளது. கடந்த வாரம் 9.19 புள்ளிகள் பெற்ற இந்த தொடர், இந்த வாரம் 9.67 புள்ளிகளைப் பெற்று தனது ஸ்திரத்தன்மையை நிரூபித்துள்ளது.
அதேபோல், சன் டிவியின் பிரைம் டைம் சீரியலான 'எதிர்நீச்சல் தொடர்கிறது' இந்த வாரம் மாபெரும் ஏற்றம் கண்டுள்ளது. கதைக்களம் தற்போது விறுவிறுப்பான மற்றும் எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டிருப்பதால், டிஆர்பி ரேட்டிங் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 8.44 புள்ளிகள் உடன் 5-ம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 9.41புள்ளிகளுடன் 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இது, விஜய் டிவியின் முக்கியப் போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளிய ஒரு பெரிய வெற்றியாகும்.
சன் டிவியின் மற்றொரு ஹிட் சீரியலான 'கயல்' இந்த வாரம் சற்றுப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. கடந்த வாரம் 9.09 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 9.36 டிஆர்பி ரேட்டிங் பெற்ற போதிலும், மற்ற சீரியல்களின் ஆக்ரோஷமான போட்டியில் 4-ம் இடத்துக்குப் பின்தங்கி உள்ளது.
அதேபோல், கேபி நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'மருமகள்' சீரியலும் சிறிய சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம் 8.55 புள்ளிகள் உடன் 4-ம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 8.99 டிஆர்பி உடன் 5-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.
