1. Home
  2. தொலைக்காட்சி

புருஷன் செத்து 3 நாள் கூட ஆகல.. எக்ஸ் காதலுடன் புகைப்படம் வெளியிட்டு வாழ்க்கையை புதுப்பிக்கும் வனிதா

புருஷன் செத்து 3 நாள் கூட ஆகல.. எக்ஸ் காதலுடன் புகைப்படம் வெளியிட்டு வாழ்க்கையை புதுப்பிக்கும் வனிதா
வனிதா விஜயகுமார் தனது எக்ஸ் காதலனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

ஆரம்பம் முதலே வனிதா விஜயகுமாரின் திருமண வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது. அதாவது ஆரம்பத்தில் ஆகாஷ் என்ற நடிகரை காதலித்து 2000 ஆண்டு வனிதா விஜயகுமார் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகன் உள்ளார். ஆனால் ஆகாஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2005இல் அவரை பிரிந்தார்.

அதன் பிறகு ராஜன் ஆனந்த் என்பவரை 2007 இல் திருமணம் செய்து கொண்டு 2010 வரை அவருடன் பயணித்தார். இந்த வாழ்க்கையும் பாதியிலேயே முடிந்ததால் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வனிதா வசித்து வந்தார். அதன் பிறகு தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வனிதா ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.

மேலும் டிஆர்பிக்காக விஜய் டிவியும் வனிதாவை விட்ட பாடு இல்லை. தங்களுடைய நிகழ்ச்சிகளில் நடுவராக வனிதா விஜயகுமாரை பங்கு பெற வைத்தனர். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான ஒரு மாதத்திற்கு உள்ளேயே இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பீட்டர் பால் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வனிதா எந்த ஒரு இரங்கலையும் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடவில்லை. இப்போது புருஷன் செத்த மூன்றே நாள் கூட ஆகவில்லை எக்ஸ் காதலனுடன் வனிதா புகைப்படம் எடுத்துள்ளார். அதாவது பீட்டர் பாலுக்கு முன்னால் ராபர்ட் மாஸ்டருடன் வனிதா கிசுகிசுக்கப்பட்டார்.

ஒரு படத்திற்காக வனிதா மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவரும் இணைந்து பணியாற்றி உள்ளனர். அப்போது ராபர்ட் மாஸ்டர் தன்னை திருமணம் செய்து கொண்டதாக வனிதா கூறியிருந்தார். ஆனால் நாங்கள் நட்பாக தான் பழகி வந்தோம் என ராபர்ட் மாஸ்டர் திடுக்கிடும் தகவலை கூறினார். அதன்பின்பு பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர் கலந்து கொண்டார்.

அப்போது ரக்ஷிதாவுடன் ஓவராக வழிந்த ராபர்ட் மாஸ்டர் சில வாரங்களிலேயே வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர் கலந்து கொள்ள வனிதா தான் பரிந்துரைத்ததாக அவரே கூறியிருந்தார். இப்போது இவர்கள் மீண்டும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. முடிந்த வாழ்க்கையை மீண்டும் வனிதா புதுப்பிக்கிறாரா என ரசிகர்கள் வினவி வருகிறார்கள். ஆனால் வனிதா தற்போது நிறைய படங்களில் கமிட் ஆகியுள்ளார். அவ்வாறு ஒரு படத்திற்காக எடுத்த புகைப்படமாக அல்லது இவர்கள் இருவரும் சேர்ந்து தொலைக்காட்சியின் நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.

புருஷன் செத்து 3 நாள் கூட ஆகல.. எக்ஸ் காதலுடன் புகைப்படம் வெளியிட்டு வாழ்க்கையை புதுப்பிக்கும் வனிதா
vanitha-vijayakumar-robert-master
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.