Actor Vijay: தன்னுடைய ரசிகையாக இருந்த சங்கீதாவை விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுடைய குடும்ப பிரச்சனை பல்வேறு விதமாக மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த ஜோடி ரசிகர்களின் ஃபேவரைட் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் விஜய்க்கு அவருடைய அம்மா ஷோபா பெண் பார்த்து வைத்திருந்த ஒரு சம்பவத்தை பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது அவர் சங்கீதாவை மருமகளாக்கிக் கொள்வதற்கு முன்பு வேறு ஒரு பெண்ணை தான் விஜய்க்கு திருமணம் செய்ய நினைத்திருந்தாராம்.
அது வேறு யாரும் கிடையாது ஷோபாவின் தம்பி சுரேந்தரின் மகள் தான். அவரை தான் விஜய்க்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என எஸ் ஏ சந்திரசேகரும் ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் அதற்கு முன்பாகவே விஜய், சங்கீதா இருவரும் காதலிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து இரு குடும்பமும் கலந்து பேசி திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் ஷோபாவுக்கு சங்கீதாவின் குணமும் பேச்சும் ரொம்பவே பிடித்து விட்டதாம். அதனாலயே தம்பி மகளை மருமகளாக்கும் எண்ணத்தை அவர் கைவிட்டு இருக்கிறார்.
இந்த விஷயத்தை தற்போது பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக கூறியுள்ளார். அந்த வகையில் பலருக்கும் விஜய்யின் திருமணத்தில் இவ்வளவு விஷயம் நடந்து இருக்கிறதா என்பது புதிய தகவலாக இருக்கிறது. அதில் சங்கீதா ஷோபாவின் எண்ணத்திற்கு குறுக்கே வந்தாலும் பிடித்த மருமகளாக இருக்கிறார் என்பதை அவரே பலமுறை கூறியிருக்கிறார்.