Vijay Tv Serial: படங்களை விட சீரியலுக்குத்தான் மக்களிடத்தில் அதிக வரவேற்பு இருக்கிறது. அதனால் தான் சில சேனல்கள் போட்டி போட்டு சீரியல்களை கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியும் கிட்டத்தட்ட 14 சீரியல்களை ஒளிபரப்பு செய்கிறார்கள். இதில் ஒரு சில சீரியல்கள் மக்களின் பேவரிட் சீரியலாக இருந்தாலும் தற்போது அதை வெறுக்கும்படியான காட்சிகளும் அமைந்துவிட்டது.
இதில் முதலிடத்தில் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல் தான். ஆரம்பத்தில் விரும்பி பார்த்தாலும் கதையே இல்லாமல் போகப் போக பார்ப்பவர்களை போரடிக்க வைத்துவிட்டது. இருந்தாலும் இந்த சீரியலை முடிக்க முடியாமல் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த பாக்யா சீரியலை 7 மணிக்கு மாற்றிவிட்டார்கள்.
இதனால் மொத்தமாக டிஆர்பி ரேட்டிங்கில் அடி வாங்கிவிட்டது. இன்னும் இதற்கு ஆப்பு வைக்கும் விதமாக 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் நேரத்தை மாற்ற போவதாக தகவல் வெளிவந்திருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால் புத்தம் புது சீரியலாக பூங்காற்று திரும்புமா என்ற சீரியல் வரப்போகிறது.
இதற்கான பிரமோ வெளிவந்த நிலையில் ஒரு சைக்கோ கேரக்டருக்கு மனைவியாக நடித்து வரும் முத்தழகின் நிலைமை தான் கதையாக இருக்கப் போகிறது. அதனால் சைக்கோ கணவரிடமிருந்து முத்தழகை காப்பாற்றி கல்யாணம் பண்ணும் செகண்ட் ஹீரோ கதை தான் பூங்காற்று திரும்புமா.
இதில் ஹீரோவாக நடிக்கும் ஷியாம் என்பவர் பூங்காற்றும் திரும்புமா என்ற சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்று பதிவு போட்டிருக்கிறார். அந்த வகையில் 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சிந்து பைரவி சீரியல் நேரம் மாறப்போகிறது. அதனால் பாக்யா சீரியலை 6:00 மணிக்கு சிந்து பைரவி சீரியலை 7:00 மணிக்கு கொண்டுவரப் போவதாக தகவல் வெளியாயிருக்கிறது.