Vijay Tv Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை வித்தியாசமாக கொடுத்து மக்களை கவர்ந்து விடுவார்கள். அதிலும் விஜய் டிவியில் ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டால் அந்த வாய்ப்பின் மூலம் திறமைகளை காட்டி அடுத்தடுத்து முன்னேறிக் கொண்டு போவார்கள். ஆனால் தற்போது வித்தியாசம் என்ற பெயரில் ஏற்றுக்கவே முடியாத ஒரு கதையை கொண்டு வந்து மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்கள்.
அதாவது சமீபத்தில் ஆரம்பித்த ஒரு சீரியல் தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அதிலும் அதில் நடிக்கும் ஆர்டிஸ்ட்கள் ஏற்கனவே ஹிட் சீரியல்களை கொடுத்து மக்களிடம் பிரபலமாக இருக்கிறார்கள். அவர்களை இந்த ஒரு சீரியலில் இழுத்துக் கொண்டு வந்து அவர்களின் கேரக்டரையும் டேமேஜ் பண்ணும் விதமாக சீரியல் நகர்ந்து கொண்டு வருகிறது.
அப்படி என்ன சீரியல் என்றால் சமீபத்தில் ஆரம்பித்த சிந்து பைரவி சீரியல் தான். இதில் சிந்து கேரக்டரில் நடித்து வரும் பவித்ரா பி நாயக், ஏற்கனவே தெலுங்கு சீரியல்களில் நடித்து பிரபலமானவர். அப்படிப்பட்டவர் தமிழில் அறிமுகமானதும் இவருக்கு ஏகப்பட்ட வரவேற்புகள் கிடைத்தது. ஆனால் தற்போது மொத்தத்தையும் டேமேஜ் பண்ணும் விதமாக சிந்து கேரக்டரில் நடித்து வரும் பவித்ரா தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறார்.
அதாவது இவருடைய கேரக்டர் எப்படி என்றால் சின்ன வயதில் இருந்து டாக்டராக இருக்கும் சிவாவை காதலித்து வருகிறார். சிவா ஒரு டாக்டர் என்பதால் அங்கு இருக்கும் இன்னொரு டாக்டரை மனப்பூர்வமாக காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கல்யாணம் பண்ணுவதற்கு தயாராக இருந்தார். ஆனால் இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று நினைத்த சிந்து ஏகப்பட்ட பொய்களை சொல்லி பித்தலாட்டம் பண்ணி டாக்டர் சிவாவை கல்யாணம் பண்ணிக் கொண்டார்.
ஆனால் இது நடந்தது பொய் கல்யாணம் என்று நிரூபிக்கும் விதமாக டாக்டர் சிவா பல சாட்சிகளை தேடிக் கொண்டு வருகிறார். ஆனால் அந்த சாட்சிகள் எல்லாம் பொய் என்பதற்கு ஏற்ப சிந்து எல்லாத்தையும் பேசி சமாளித்து சிந்துக்கு சாதகமாக எல்லாத்தையும் மாத்திக்கொண்டார். எந்த ஒரு சீரியலிலும் இல்லாத விஷயம் என்னவென்றால் இந்த ஒரு சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சிந்து கஷ்டப்படும் பொழுது பார்ப்பவர்களுக்கு ரொம்பவே மனது குளுகுளு என்று சந்தோசமாக இருக்கிறது.
அதிலும் இப்பொழுது போலீஸிடம் அடி வாங்கும் காட்சிகள் அனைத்தும் இதுவரை சிந்துவை பார்த்து கடுப்பானவர்களுக்கு ஒரு மருந்தாக தான் இருக்கிறது. இன்னும் சொல்ல போனால் இது காணாது இன்னும் சிந்து கஷ்டப்பட வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு சிந்து மீது மொத்த வன்மத்தையும் கொட்டி வருகிறார்கள். அந்த அளவிற்கு கதாநாயகி கேரக்டரை எடுத்து நடித்து வரும் சிந்து டேமேஜ் ஆகி வருகிறார்.
இது ஒரு விதத்தில் சீரியலாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு கதைகள் இருப்பதால் தமிழில் கிடைத்த முதல் வாய்ப்பில்லையே பவித்ரா தமிழ் ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்து விட்டார். நல்லவேளை இதில் நான் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பைரவி கேரக்டரில் உள்ளே வந்த பிக் பாஸ் ரவீனா பாதியிலேயே போனதால் அவருக்கு பதிலாக ஆர்த்தி சுபாஷ் தற்போது நடித்து வருகிறார். டிஆர்பி ரேட்டிங்கிலும் சொல்லும் படி இந்த சீரியல் இடம் பெறவில்லை.