Vijay Tv Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கால் வாசி சீரியல்கள் அனைத்தும் மக்கள் மனதை கவர்ந்து தினமும் பார்க்கும் படியான ஒரு ஏக்கத்தையும் உண்டாக்கி இருக்கிறது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் விஜய் டிவி சீரியல் இருக்கிறது.
ஆனாலும் விஜய் டிவியில் சில சீரியல்கள் கதையே இல்லாமல் பல வருடங்களாக இழுத்து அடித்து மக்களிடமிருந்து வெறுப்பை சம்பாதித்துக் கொண்டு வருகிறது. இந்த லிஸ்டில் முதலில் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல் தான். கிட்டத்தட்ட 1000 எபிசோடு தாண்டிய நிலையில் கதையே இல்லாமல் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த சீரியலை முடித்துவிட்டு அதற்கு பதிலாக புத்தம்புது சீரியலை கொண்டு வாங்க என்று மக்கள் தொடர்ந்து கமெண்ட் பண்ணி வருகிறார்கள். ஆனால் சேனல் தரப்பில் இருந்து பாக்கியலட்சுமி சீரியலை முடிக்காமல் அதற்கு பதிலாக மக்களின் பேவரிட் சீரியலாக இருக்கும் நீ நான் காதல் சீரியலை முடிவுக்கு கொண்டு வர முடிவு எடுத்து விட்டார்கள்.
இன்னும் ஒரு சில வாரங்களில் நீ நான் காதல் சீரியல் முடிய போகிறது, இதற்கான கிளைமேக்ஸ் காட்சிகள் ஆரம்பம் ஆகிவிட்டது. அதற்கு முதலாவதாக போட்ட பிள்ளையார் சுழி தான் ராகவன் அவருடைய காதலை அபியிடம் வெளிப்படுத்தியது. தற்போது இவங்க ஜோடி சூப்பர் என்று மக்கள் கொண்டாடும் இந்த நேரத்தில் நீ நான் காதலுக்கு இப்படி ஒரு சோதனையா என்பதற்கு ஏற்ப முடிய போகிறது. இதற்கு பதிலாக பூங்காற்று திரும்புமா என்ற புத்தம்புது சீரியல் வரப்போகிறது.
Siragadikka aasai ya muduchu vidunga… kaduppaguthu…
சரியாக இல்லாத சீரியல்
Sirakadikka aasai waste
Siragadikka aasai serial nalla than poguthu atha en mudichu vaikanum.