டிஆர்பிக்காக விஜய் டிவி போட்ட பிளான்.. ராமருக்கும் லட்சுமிக்கும் நடந்த பஞ்சாயத்து

Vijay Tv: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை விட ரியாலிட்டி ஷோ தான் மக்களை அதிக அளவில் கவர்ந்திருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடர் வெற்றி அடைந்து ஒவ்வொரு வருஷமும் அடுத்தடுத்த சீசன்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

அதன்படி சமீபத்தில் முடிந்து போன பிக் பாஸ் 8 வெற்றியை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 6 நாளை முதல் 8:00 மணிக்கு ஆரம்பமாகப் போகிறது. இதில் முதல் நான்கு சீசன்களிலும் நடுவராக வெங்கட் பட் மற்றும் தாமு சார் வழங்கி வந்தார்கள். ஆனால் மீடியா மேசன் விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு மாறியதால் வெங்கட் பட்டும் மீடியா மேசன் மீது இருந்த நன்றி உணர்வால் சன் டிவிக்கு மாறிவிட்டார்.

அதனால் கடந்த சீசனில் தாமுடன் சேர்ந்து புதிதாக மாதம்பட்டி ரங்கராஜ் தொகுத்து வழங்கி வந்தார். இதனை தொடர்ந்து தற்போது ஆரம்பிக்கப் போகும் ஆறாவது சீசனில் தாமு மாதம்பட்டி ரங்கராஜ் இவர்களுடன் சேர்ந்து செஃப் கெளசிக் கலந்து கொள்கிறார்.

மேலும் இந்த சீசனில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்களின் லிஸ்ட் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் வழக்கம்போல் கோமாளியாக புகழ், குரேஷி, சுனிதா, தங்கதுரை, ராமர் மற்றும் பிக் பாஸ் சௌந்தர்யா ஆகியோர் வருகிறார்கள்.

இவர்களுடன் சேர்ந்து சமைக்க போகும் போட்டியாளர்கள் யார் என்றால் லட்சுமி ராமகிருஷ்ணன், பிரியா ராமன், தேனடை மதுமிதா, கஞ்சா கருப்பு, செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா, பிக் பாஸ் இன் வெற்றியாளர் மற்றும் தொகுப்பாளராக இருக்கும் ராஜு மோகன், உமர் லத்தீப் மற்றும் மெரினா மீன் குழம்பு ஸ்பெஷலிஸ்ட் சுந்தரி அக்காவும் கலந்து கொள்ளப் போகிறார்கள்.

அத்துடன் போட்டியாளராக வந்திருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் ராமருக்கும் ஏற்கனவே பஞ்சாயத்து ஏற்பட்டு இருக்கிறது. அதாவது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சொல்வதெல்லாம் பொய் என்னும் கான்செப்ட்டை உருவாக்கி லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்லும் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற டயலாக்கை ராமர் சொல்லி வைரலாக்கி வந்தார்.

இதனால் கடுப்பான லட்சுமி, விஜய் டிவிக்கும் ராமருக்கும் நோட்டீஸ் அனுப்பி பிரச்சினையாகி இருந்தது. இந்த சூழலில் இவர்கள் இரண்டு பேரையும் மறுபடியும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் விதமாக டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்கலாம் என்ற நோக்கத்தில் விஜய் டிவி லட்சுமி ராமகிருஷ்ணனை சமரசம் செய்து போட்டியாளராக கொண்டு வந்து இருக்கிறார்கள். இனி இனி நடக்க போகும் சம்பவம் வெறித்தனமாக தான் இருக்கப் போகிறது.