Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி மற்றும் கரிகாலன் தர லோக்கல் ஆக இறங்கி மண்டபத்தில் இருக்கும் அனைவர் முன்னாடியும் குடித்துவிட்டு போதையில் ஆடுகிறார்கள். இவர்களுடன் சேர்ந்து கதிரும் ஆட்டம் போடுகிறார்.அத்துடன் கரிகாலன், ஆதிரை ஜனனி மற்றும் நந்தினி இவர்களையும் வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு அநாகரிகமாக நடந்து கொள்கிறார்.
இதை பார்த்த குணசேகரன் பெரிய தப்பு பண்ணிட்டோம் இந்த சம்பந்தமே வச்சிருக்க கூடாது என்று பீல் பண்ணி புலம்புகிறார். இதை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஞானம் நீங்க தானே தேடிப் பிடித்து இந்த மாப்பிள்ளை தான் வேணும்னு சொல்லிட்டு பேசி முடித்து இருக்கீங்க என்று குணசேகரனை குத்தலாக சொல்கிறார்.
அதற்கு குணசேகரன் இருக்கட்டும் இதெல்லாம் ஆதிரை கல்யாணம் முடியும் வரை தான். அதன் பின் கரிகாலனை வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக் கொண்டு ஜான்சி ராணியை இந்த தெரு பக்கமே வராதபடி அடித்து விரட்டணும் என்று சொல்கிறார். இவர் இப்படி நினைக்கையில் ஜான்சி ராணி, ஆதிரை கல்யாணத்துக்கு பிறகு குணசேகரன் சொத்தை எப்படியாவது அபகரிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார்.
ஆக மொத்தத்தில் இரண்டும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் தான். அத்துடன் இவர்கள் இரண்டு பேருமே நினைத்தது போல் திருமணம் நடக்கப்போவதில்லை. ஏனென்றால் எப்படியும் ஆதிரை கரிகாலன் திருமணம் நடக்காது என்று நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. அடுத்ததாக ஜனனி பிளான் பண்ண படி ஆதிரை அருண் திருமணம் நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
அதே நேரத்தில் ஜீவானந்தம் கண்டிப்பாக இந்த திருமணத்தில் பெரிய ஸ்கெட்ச் போட்டுக் கொண்டிருக்கிறார். எது எப்படியோ தயவு செய்து கூடிய சீக்கிரத்தில் ஆதிரை திருமணத்தை இதோடு முடித்து விடுங்கள். அதற்காக ஜனனி மற்றும் நந்தினி, குணசேகரன் அம்மாவிடம் என்ன பண்ணுவீங்களோ எங்களுக்கு தெரியாது. உங்களுடைய மொத்த வித்தையும் பயன்படுத்தி எங்களை வெளியில் அனுப்பி வைக்க வேண்டியது உங்களுடைய பொறுப்பு என்று கூறி இருக்கிறார்கள்.
அதன்படி குலதெய்வம் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்று குணசேகரனிடம் அனைவரும் வந்து சொல்லும்போது ஜான்சி ராணி இது என்ன புதுசாக இருக்கிறது என்று சொல்ல, அதற்கு ஆக்ரோஷமாக குணசேகரனின் அம்மா நிறுத்துடி கொஞ்சம் என்று பொங்கி எழுகிறார். இதுவரை துள்ளிக்கிட்டு இருந்த ஜான்சி ராணி வாயடைத்து நிற்கும் நிலைமை ஆகிவிட்டது.