13 பேர் நாமினேட்.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது இவரா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் பரபரப்பான வார இறுதியில், யாரும் எதிர்பாராத வகையில் கெமிஅவர்கள் இந்த வார எலிமினேஷன் மூலம் வெளியேறியுள்ளார். மொத்தமுள்ள 13 நாமினேட் ஆன போட்டியாளர்களில், குறைந்த வாக்குகளைப் பெற்ற டேஞ்சர் ஜோனில் இருந்த கெமி, ரசிகர்களின் அதிர்ச்சிக்கு மத்தியில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
பிக் பாஸ் வீட்டில் நாமினேஷன் என்பது ஒரு தனி அறைக்குள் நடைபெறும் ரகசிய நிகழ்வு. ஆனால், இந்த வாரம் பிக் பாஸ் வீடே பரபரப்பாக ஒரு வித்தியாசமான ஓபன் நாமினேஷன் முறையைப் பார்த்தது. இது வழக்கமான நாமினேஷனை விட போட்டியாளர்கள் மத்தியில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியது. ஒரு போட்டியாளர், மற்றொருவரை நாமினேட் செய்யும் போது அதற்கான காரணத்தை நேரடியாகச் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த ஓபன் நாமினேஷன் மூலம், மொத்தமுள்ள போட்டியாளர்களில் மூன்று பேர் (FJ, கானா வினோத், கம்ருதீன்) தவிர எஞ்சியுள்ள 13 பேரும் நாமினேட் செய்யப்பட்டனர். அதாவது, வீட்டின் பெரும்பான்மையான போட்டியாளர்கள் எலிமினேஷன் வளையத்திற்குள் வந்ததால், இந்த வார எலிமினேஷன் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பல மடங்கு அதிகரித்தது. யார் வெளியேறப் போகிறார்கள் என்ற கேள்வி அனைவரது மனதிலும் ஓடிக்கொண்டிருந்தது.
இந்த வார வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே திவ்யா அவர்கள் மிக அதிக வாக்குகளைப் பெற்று, முதல் இடத்தில் இருந்தார். அவர், வீட்டின் டாஸ்க்குகளில் காட்டும் ஈடுபாடு மற்றும் நியாயமான குணம் ஆகியவை ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. எனவே, அவர் எலிமினேட் ஆக வாய்ப்பே இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
அவருக்கு அடுத்தபடியாக, சாமர்த்தியமான ஆட்டக்காரர்களான விக்கல்ஸ் விக்ரம் மற்றும் பார்வதி ஆகியோர் ஒரு லட்சத்திற்கும் மேல் வாக்குகளைப் பெற்று வலுவான இடத்தில் இருந்தனர்.
இவர்களைத் தவிர, சபரி, சாண்ட்ரா, அரோரா மற்றும் கனி ஆகியோரும் கணிசமான வாக்குகளைப் பெற்று பாதுகாப்பான இடத்தைப் பிடித்துவிட்டனர். குறைந்த வாக்குகளைப் பெற்று, வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளவர்கள் கெமி, பிரஜன், அமித் பார்கவ், சுபிக்ஷா, ரம்யா ஜோ இந்த ஆறு பேருக்கும் இடையில் தான் கடுமையான போட்டி நிலவியது.
இந்த வாரம் மிகவும் குறைந்த வாக்குகளைப் பெற்று, மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, கெமி அவர்கள் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார் என்ற அறிவிப்பு வெளியானது.
கெமியின் வெளியேற்றம், மீதமுள்ள போட்டியாளர்களுக்கு ஒரு பெரிய பாடமாக இருக்கும். இனி வரும் வாரங்களில், யார் டேஞ்சர் ஸோனில் இருக்கிறார் என்பது குறித்து அவர்கள் கூடுதல் கவனத்துடன் விளையாடத் தொடங்குவார்கள்.
