திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சாப்பாடும் கொடுக்காமல், சம்பளமும்கொடுக்காமல் அசிங்கப்படுத்திய படக்குழு.. அஜித், விஜய் பட வில்லனுக்கு நடந்த கொடூரம்

இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரும் தங்களுடைய தொடக்க காலத்தில் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க ரொம்பவும் கஷ்டப்பட்டு வந்தவர்கள் தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தில் இருந்து, அல்டிமேட் ஸ்டார் அஜித் வரைக்கும் சினிமாவில் கால் பதித்த தருணத்தில் அவமானங்களை சந்திக்காதவர்கள் இல்லை. அப்படியொரு முன்னணி நடிகர் தான் தன்னுடைய ஆரம்ப காலங்களில் பட்ட கஷ்டங்களை அண்மையில் ரொம்பவும் மனம் உருகி பேசியிருக்கிறார்.

சினிமாவில் 170 படங்களுக்கு நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ஜெகபதி பாபு. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர். தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடித்த பைரவா, நடிகர் அஜித் நடித்த வீரம், விசுவாசம் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்தே திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

Also Read: பிரபாஸுக்கு வில்லனாக ரஜினி பட நடிகர்.. மூக்கில் வளையம், கொலைவெறி பார்வை என வைரலாகும் போஸ்டர்

சமீபத்தில் ஜெகபதி பாபு ஒரு பேட்டியில் தன்னுடைய சினிமா வாழ்க்கையை பற்றி பேசியிருக்கிறார். அப்போது தன்னுடைய வெற்றியை பற்றியும், பெற்ற விருதுகளை பற்றியும் பேசாமல் ஆரம்ப காலங்களில் அவர் பட்ட கஷ்டங்களையும், அவமானங்களையும் பற்றி ரொம்பவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார் இந்த பிரபல நடிகர்.

1992 ஆம் ஆண்டு நடிகர் ஜெகபதி பாபு ஒரு தெலுங்கு படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பின் போது அவர் நிறைய அவமானங்களை சந்தித்திருக்கிறார். அந்த படத்தில் நடித்ததற்காக ஜெகபதி பாபுவுக்கு சம்பளம் கொடுக்கவில்லையாம். மேலும் பத்து நாட்களுக்கு மேலாக அவருக்கு சாப்பாடும் கொடுக்கவில்லையாம்.

Also Read: தல, தளபதி, ரஜினியுடன் போட்டி போட்ட ஒரே வில்லன் இவர்தான்.. ஒரு காலத்துல ஹீரோவா கலக்குனாரு

ஒரு கட்டத்தில் அந்த படக்குழுவில் வேலை செய்து கொண்டிருந்த லைட்மேன் ஒருவர் தனக்கு கொடுக்கப்பட்ட சாப்பாடை ஜெகபதி பாபுவுக்கு கொடுத்திருக்கிறார். தெலுங்கில் தொடர்ந்து நடிப்பதால் தான் மரியாதை இல்லாமல் போய்விட்டது என்று யோசித்த இவர் வேறு மொழி படங்களிலும் நடிக்கலாம் என்று முடிவெடுத்து நடித்திருக்கிறார்.

அப்படி முடிவெடுத்து வெளியே வந்த ஜெகபதி பாபு, இன்று ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் முன்னணி நடிகராக இருக்கிறார். மேலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு பல விருதுகளும் கிடைத்தது .

Also Read: சோத்துக்கே சிங்கி அடிக்கிறாரா அஜித், விஜய் பட வில்லன்? வைரலாகும் புகைப்படம்

Trending News