வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ஆந்திர மக்களுக்கு தெலுங்கு ஹீரோக்கள் தந்த நிதியுதவி.. தல, தளபதி, தலைவர் எல்லாம் இருக்கீங்களா ?

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடந்த செப்டம்பர் மாதம் பலத்த மழை பெய்தது. இதில் அங்கு அங்குள்ள பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, விஜய்வாடார, கர்ணூல் ஆகிய பகுதிகளில் அதிக வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அப்போது தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் நிதியுதவி அளித்தனர். அதில், நடிகர் ஜுனியர் என்.டி.ஆரும், சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும் 50 லட்சமும், அல்லு அர்ஜூன், சிரஞ்சீவி, பிரபாஸ் தலா 1 கோடியும், ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் ஆந்திரா & தெலுங்கானா மா நில முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடியும், இரு மாநில கிராம பஞ்சாயத்துக்கு ரூ.4 கோடியும் நிதி வழங்கி உதவினார்.

தமிழ் ஹீரோக்கள் செய்த உதவி பற்றி புளூ சட்டைமாறன் பதிவு

சமீபத்தில், வங்ககடலில் உருவான பெஞ்சல் புயல் புதுச்சேரி – மரக்காணம் இடையே கரையைக் கடந்ததது. இந்தப் புயலால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை ஆகிய பகுதிகள் பலத்த சேதமடைந்தன.

இப்புயல் பாதிப்பைத் தொடர்ந்து அரசின் மீட்பு பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ் நடிகர்கள் விஜய், கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோர் உதவினர்.

அதில், பாதிக்கப்பட்ட மக்களை தன் வீட்டிற்கு அழைத்து 300 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை நேரடியாக வழங்கினார்.

நடிகர் கார்த்தி 15 லட்சத்திற்கான காசோலையும், சிவகார்த்திகேயன் 10 லட்சத்திற்கான காசோலையும் வழங்கினர். மற்ற நடிகர்கள் எதுவும் செய்யவில்லை என விமர்சனம் எழுந்தன.

இப்புயல் பாதிப்பு நிவாரணமாக மக்களுக்கு மற்ற நடிகர்கள் ஏன் நிதி உதவி செய்ய முன்வரவில்லை? ஆந்திரா, தெலுங்கானாவில் அங்குள்ள முன்னணி நடிகர்கள் பல கோடி நிவாரண உதவி செய்கின்றனர்.

அதுபோல் இங்குள்ள நடிகர்கள் மக்களுக்கு உதவ ஏன் மனம் வரவில்லை என்று கேட்பதுபோல் மற்ற நடிகர்கள் பலத்த மெளனம் என கிண்டலடிக்கும் வகையில் புளூ சட்டை மாறன் எக்ஸ் தள பக்கத்தில் இதைப் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Trending News