திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சமந்தாவால் தமன்னாவை ஒதுக்கும் திரை உலகம்.. பின்னணியில் உள்ள காரணம்

தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் கேடி என்ற திரைப் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக அறிமுகமானார்.

அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்த அவருக்கு தமிழில் கல்லூரி திரைப்படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் கார்த்தி, தனுஷ், விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

மேலும் உலக அளவில் புகழ்பெற்ற பாகுபலி திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் ஜோடியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவர் கடைசியாக தமிழில் ஆக்சன் திரைப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பிறகு இவர் தற்போது ஹிந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு சமீபகாலமாக அங்கு பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது. நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடிக்க இருந்த தமன்னா கடைசி நேரத்தில் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.

அதாவது தமன்னா, நடிகை சமந்தாவின் நெருங்கிய தோழி ஆவார். தற்போது சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். நாக சைதன்யா தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான அக்கினேனி குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இதன் காரணமாகவே நடிகை தமன்னாவுக்கு தெலுங்கு திரையுலகில் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக அங்கு கிசுகிசுக்கப்படுகிறது. தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் அவ்வளவாக பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், தமன்னா தற்போது ஹிந்தி பக்கம் தன் கவனத்தை திருப்பி உள்ளார்.மேலும் சோசியல் மீடியாவில் அவ்வப்போது தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Trending News