வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படங்கள்.. மிஸ் பண்ணாம பாருங்க!

க்ரைம், த்ரில்லர், டிராமா, ரொமான்ஸ் என்று தமிழ் ரசிகர்கள் அதிகமாக விரும்பிப் பார்த்த தெலுங்கு படங்கள் நிறைய உள்ளது. அதில் சூப்பர் ஹிட்டான மேலும் இந்த லாக் டவுன் சமயத்தில் மிஸ் பண்ணாம பார்க்கக்கூடிய படங்கள் வரிசையை தற்போது பார்க்கலாம்.

அலா வைகுந்தபுரமுலோ: திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில், அல்லு அரவிந்த் தயாரிப்பில், பிரமாண்ட வெற்றி பெற்ற படம் அலா வைகுந்தபுரமுலோ. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெட்கே, நிவேதா பெத்துராஜ், சமுத்திரக்கனி போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். முதல் நாளே 85 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அல்லு அர்ஜுன் முதல் முறையாக 200 கோடி வரை வசூல் செய்த படமாக பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் வரும் ‘புட்டபொம்மா புட்டபொம்மா’ என்ற பாடல் உலக அளவில் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

சரிலேரு நீக்கெவரு: அணில் ரவிபுடி இயக்கத்தில் மகேஷ்பாபு, விஜயசாந்தி, ரஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ் போன்ற பிரபலங்கள் நடிப்பில் சூப்பர்ஹிட் கமர்ஷியல் படமாக வெளிவந்தது சரிலேரு நீக்கெவரு. 75 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 2.6 பில்லியன் வசூல் செய்துள்ளதாம். ராணுவ வீரராக மகேஷ்பாபு இந்த படத்தில் நடித்திருப்பார். ராணுவ வீரரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கும். ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற படமாகப் பார்க்கப்படுகிறது.

பீஷ்மா: வெங்கி குடமுலா இயக்கத்தில் நிதின், ரஷ்மிகா மந்தனா போன்றோர் நடிப்பில் கமர்சியல் ஹிட் அடித்த படம் பீஷ்மா. ரொமான்டிக் மற்றும் ஆக்ஷன், காமெடி கலந்த இந்த படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற படமாகப் பார்க்கப்படுகிறது. இயற்கை உரங்களின் மூலம் விவசாயம் செய்யும் ஒரு விவசாயின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கும். அந்த விவசாயத்தை எப்படி கெமிக்கல் கலந்த உரத்தின் மூலம் அளிக்க முடியும், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை மிக தத்ரூபமாக வெளிக்கொண்டு வந்திருப்பார் இயக்குனர். தெலுங்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழர்களையும் கவர்ந்த படமாக இது பார்க்கப்படுகிறது.

ஹிட்: சஸ்பென்ஸ் த்ரில்லர் கலந்த இந்த படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. 6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் விஷ்வக் சன், ருஹனி ஷர்மா,முரளி சர்மா போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கதாநாயகன் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். நேகா என்ற தோழியை கடத்துகின்றனர். விக்ரம் அதனை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது கதை. நேகா உயிருடன் இருக்கிறாரா? இறந்துவிட்டாரா? என்பது தெரியாமல் தேட ஆரம்பிக்கிறார். ஒவ்வொரு காட்சிகளும் சஸ்பென்ஸ் கலந்து ரசிகர்கள் ரசிக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கும்.

ஜெர்சி: கௌதம் இயக்கத்தில் நாணி, ஷ்ரதா ஸ்ரீநாத் நடிப்பில், அனிருத் இசையில் வெளிவந்த படம் தான் ஜெர்சி. ரஞ்சி கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை மையமாக எடுக்கப்பட்ட படம். சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்தும், தனது வாழ்க்கையைத் தொலைத்து மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பதற்காக போராடும் ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை அற்புதமாக இயக்கி இருப்பார். அனிருத்தின் இசை இந்த படத்தின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது.

கேங் லீடர்: விக்ரம் குமார் இயக்கத்தில் 40 கோடி வரை பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை படைத்த படம். இந்த படத்தில் நாணி, பிரியங்கா அருள்மோகன், லக்ஷ்மி, கார்த்திகேயா போன்ற பிரபலங்கள் நடித்திருப்பார்கள். 5 பெண்கள் தங்கள் ஆண் துணைகளை இழந்தவர்களை கொன்ற நபரை பழிவாங்கும் கதைதான் கேங் லீடர். ஒருவருக்கு ஒருவருக்கிடையே மறைக்கப்படும் இரகசியங்களை சஸ்பென்ஸான கதையின் மூலம் சுவாரஸ்யமாக அமைந்திருப்பார் விக்ரம்.

மஜிலி: சிவா நிர்வனா இயக்கத்தில் நாகசைதன்யா, சமந்தா, கௌஷிக் போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம் மஜிலி. ரொமான்டிக், ஸ்போர்ட்ஸ் கலந்த இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், பாக்ஸ் ஆபீசில் 65 கோடி வரை வசூல் செய்தது.

Palasa 1978: கருண குமார் இயக்கத்தில் ரக்ஷித், நக்ஷத்ரா, Raghu Kunche போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம் Palasa 1978. ஆக்சன் கலந்த இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

118: குகன் இயக்கத்தில் நண்டமுறி கல்யாண ராம், ஷாலினி பாண்டே, நிவேதா தாமஸ் போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம் 118. இந்த படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று, பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 20 கோடி வரை வசூல் செய்தது. சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் கலந்த படம்.

ஒரு ஹோட்டலில் ரூம்மில் நிவேதா தாமஸ் கொலை செய்யபடுகிறார், அங்கு தங்குவதற்காக செல்லும் கதாநாயகனுக்கு வரும் கனவில் எப்படி அவர் கொல்லப்பட்டார் என்பது தெரியவருது. அதை அடிப்படையாக வைத்து கொலையாளிகளை கண்டு புடிக்கும், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் கலந்த படம். தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ் மக்களிடமும் மாபெரும் வெற்றி பெற்றது.

எவரு: வெங்கட்ராம்ஜி இயக்கத்தில் அடிவி செஸ், நவீன் சந்திரா, ரெஜினா, முரளி சர்மா போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம் எவரு. கிரைம் திரில்லர் கலந்த இந்த படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. 20 கோடி வரை வசூல் சாதனை படைத்தது, ஒரு அறையினுள் ரெஜினாவின் காதலர் கொல்லப்படுகிறார். அந்த கொலை எப்படி நடக்கிறது என்பதை கண்டுபிடிப்பதற்காக போலீஸ் அதிகாரி தனது இன்வெஸ்டிகேஷன் செய்யும் விதம் மிக அற்புதமாக காட்டபட்டிருக்கும்.

Trending News