புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிவகார்த்திகேயனுடன் 2 படங்கள் ஜோடியாக நடித்த பிரபல சீரியல் நடிகை.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்ததன் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் காக்கி சட்டை படத்தில்  இணைந்தார். இப்படம் சுமாரான வெற்றியை பதிவு செய்தது. பின்பு சிவகார்த்திகேயன் நட்புக்காக ரெமோ படத்தில் ஒரு கெஸ்ட் ரோல் மட்டும் நடித்துவிட்டு சென்றார்.

தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா. அதன்பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான காஷ்மோரா திரைப்படத்தில் நடித்தார். இப்படம் பெரிய அளவிற்கு வெற்றி பெறாததால் மீண்டும் தெலுங்கிற்க்கே சென்றுவிட்டார்.

sri divya telugu serial
sri divya telugu serial

சினிமாவின் ஆரம்ப காலத்தில் மற்ற நடிகைகளைப் போல இல்லாமல் ஸ்ரீதிவ்யா பல கஷ்டங்கள்பட்டுள்ளார். இதுவரைக்கும் ஸ்ரீதிவ்யா பல படங்கள் நடித்துள்ளார் என்பது ரசிகர்களுக்கு தெரியும் ஆனால் ஸ்ரீதிவ்யா சீரியலிலும் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கில் thoorpu velle railu serial எனும் சீரியலில் நடித்துள்ளார். சீரியல் நடித்ததன் மூலம் ஸ்ரீதிவ்யா  படிப்படியாக சினிமாவிற்குள் நுழைந்து ஹீரோயினாக வெற்றி பெற்றுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மற்ற நடிகைகள் போல் இல்லாமல் திறமையின் மூலம் வெற்றி பெற்றுள்ளார் என கூறி வருகின்றனர்.

Trending News