புதன்கிழமை, ஜனவரி 22, 2025

திருப்பதி கோயிலில் ஸ்ரேயாவுக்கு நச்சுனு முத்தம் கொடுத்த கணவர்.. சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுத்து வந்த நடிகை தான் ஸ்ரேயா. இவர் மழை, திருவிளையாடல் ஆரம்பம், எனக்கு 20 உனக்கு 18, தோரனை, ரௌதிரம், கந்தசாமி, குட்டி போன்ற திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அதுமட்டுமின்றி, உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவாஜி என்ற திரைப்படத்திலும் இளைய தளபதி விஜயுடன் அழகிய தமிழ் மகள் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

தனுஷ், ஜெயம் ரவி, விஷால், விக்ரம், ஜீவா போன்ற நடிகர்களுடனும் நடித்துள்ளார் ஸ்ரேயா. மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் பல உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து ஏராளமான மெஹாஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். தமிழில் ‘இந்திரலோகத்தில் நான் அழகப்பன்’ என்ற திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலுடன் இணைந்து இவர் ஆடிய ஆட்டத்திற்கு பிறகு இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து விட்டது.

உச்ச நட்சத்திரங்களுக்கே இணையாக இருக்கும் இவர் ஆடிய குத்தாட்டம் இயக்குனர்களையும், படக்குழுவினர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. இதனால் இவருக்கு பட வாய்ப்பும் அதிகளவில் சரிந்தது எனவே சொல்லலாம்.

இவ்வாறாக பல மொழிகளில் கதாநாயகியாக நடித்து வந்த ஸ்ரேயா, 2018 ஆண்டில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரே கோஸ்ஸிப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் ஒரு ரஷ்ய டென்னிஸ் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்கு பிறகும் ஒரு சில படங்களில் நடித்து வந்துள்ளார்.

actress-shreya-cinemapettai
actress-shreya-cinemapettai

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு கணவனும், மனைவியுமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு ஆண்ட்ரே கோஸ்ஸி, மனைவி ஸ்ரேயாவுக்கு திருக்கோவில் வளாகத்தில் வைத்து முத்தம் கொடுப்பது போல் புகைப்படம் எடுத்துள்ளனர்.

அந்த புகைப்படத்தை வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். கோவிலுக்குள் இப்படிப்பட்ட முத்தக் காட்சியை எடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘கோவிலுக்கு போனோமா, சாமிய தரிசனம் பண்ணோமா, பிரசாதம் சாப்டோமா, வீட்டுக்கு போனோமான்னு இல்லாம உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை?’ என்று பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Trending News