செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

தனித்துவமான குரல் வளம் கொண்ட 6 நடிகர்கள்.. வில்லனாக மிரட்டி காமெடியாக மாறிய பரிதாபம்

சினிமாவை பொறுத்த வரை நடிப்பு, முக பாவனையோடு சேர்த்து குரல் வளமும் மிக முக்கியமான ஒன்று. இந்த மூன்றில் எது மிஸ் ஆனாலும் கதாபாத்திரம் செல்லுபடி ஆகாது. சில தனித்துவமான குரலால் மக்களிடையே பிரபலமானவர்களும் உண்டு. தன்னுடைய தனித்தன்மையான குரலால் மிரட்டும் வில்லனாக இருந்து பின்னர் காமெடியனாக ஆனவர்களும் உண்டு.

ஜனகராஜ்: ஜனகராஜ் தமிழ் திரைப்படங்களில் காமெடியனாகவும் கலக்கி உள்ளார், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். பாட்ஷா, அண்ணாமலை, அருணாச்சலம், பணக்காரன் என பல திரைப்படங்களில் ரஜினியுடன் பவர்புல் கேரக்டரில் நடித்த இவர் காமெடியில் கவுண்டமணி, செந்திலுக்கு போட்டியாகவும் நடித்துள்ளார். நாயகனில் குணச்சித்திர வேடத்தில் மனதில் நின்ற ஜனகராஜ், ‘கேளடி கண்மணி’ படத்தில் ராதிகாவையும், ‘கன்னி ராசி’ படத்தில் ரேவதியையும் காதலிக்கும் ஒரு தலை காதலனாகவும் பட்டையை கிளப்பி இருப்பார்.

விடிவி கணேஷ்: 2002 ஆம் ஆண்டு ரெட் திரைப்படத்தில் அறிமுகமான கணேஷ் ஜனார்த்தனன் அவர் தயாரித்த ‘விண்ணை தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் பேசிய வசனத்தின் மூலம் ‘VTV’ கணேஷ் என்றழைக்கப்படுகிறார்.

‘வேட்டையாடு விளையாடு’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த இவர், அவருடைய குரல் வளத்தினாலேயே இப்போது காமெடியனாக நடித்துக் கொண்டிருக்கிறர்.

மொட்ட ராஜேந்திரன்: பாலா இயக்கத்தில் ‘நான் கடவுள் ‘ திரைப்படத்தில் பிஞ்சு குழந்தைகளை கடத்தி, பிச்சை எடுக்க வைக்கும் வில்லனாக தன்னுடைய கரடு முரடான குரலினால் மிரட்டிய இவர், ‘இவனுக்கு தண்ணில கண்டம்’, ‘ராஜா ராணி’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்னும் திரைப்படங்களில் நடித்து தன்னுடைய வில்லன் இமேஜை தக்க வைக்காமல் போய்விட்டார். இப்போது பல படங்களில் காமெடியனாக நடித்து கொண்டிருக்கிறார்.

அர்ஜுன் தாஸ்: அர்ஜுன் தாஸ் வீரார்ந்த குரலுக்கு சொந்தக்காரர். கைதி படத்தில் ‘அன்பு’ என்னும் கேரக்டரில் நடித்து மக்களிடையே பிரபலமான இவர், அதற்கு முன் பெருமான், ஆக்சிஜன் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவருடைய சாயலும், குரலும் மறைந்த நடிகர் ரகுவரனை நினைவூட்டும் விதமாக உள்ளது.

ஓமக்குச்சி நரசிம்மன்: ஓமக்குச்சி நரசிம்மன் பழம்பெரும் தமிழ் நகைச்சுவை நடிகர். தான் நடித்த யாமகுச்சி என்னும் மேடை நாடகத்திலிருந்து நரசிம்மனுக்கு, ஓமக்குச்சி நரசிம்மன் என்னும் பெயர் வந்தது. இவர் நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் , சூரியன் திரைப்படத்தில் கவுண்டமணியோடு நடித்த காமெடி காட்சி மற்றும் தலைநகரம் திரைப்படத்தில் வடிவேலுடன் நடித்தது மிகப்பிரபலம்.

கல்லாப்பெட்டி சிங்காரம்: கல்லாப்பெட்டி சிங்காரம் இல்லாத இயக்குனர் பாக்யராஜின் திரைப்படங்களே இல்லை. இவருடைய கோயம்பத்தூர் பாஷை தான் இவருக்கான மிகப்பெரிய பிளஸ். பாக்யராஜ்-கல்லாப்பெட்டி சிங்காரம் காம்போவில் அனைத்து காமெடி சீன்களும் வரவேற்பை பெற்றவை.

Trending News