ஸ்ரீனிவாசன் யாரிந்த டி.எஸ்.ஆர். திருப்பூரில் டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரி நடத்திக்கொண்டிருந்த சீனிவாசனுக்கு தொழிலில் தொய்வு ஏற்படவே சினிமாவின் பக்கம் தலை காட்டினார். வித்தியாசமான தோற்றம் இவரை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தியது. சினிமாவிற்காக ஸ்ரீனிவாசன் என்ற தன் பெயரை டி.எஸ்.ஆர் என்று மாற்றிக் கொண்டார்.
பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு வரை முதலிடம், காதல் தோல்வி, 2000 ஆண்டில் டெக்ஸ்டைலில் ஆயிரம் கோடி முதலீடு அதற்குப்பின் சினிமா மேல் வந்த மோகம். ஸ்ரீனிவாசன் கோடம்பாக்கத்தில் சுற்றாத இடமே இல்லை, ஏறாத ஸ்டுடியோவும் இல்லை, நடிப்பு மட்டும் வரவே இல்லை.
ஒருமுறை ஈக்காட்டுத்தாங்கல் பக்கம் நடந்து சென்று கொண்டிருக்கும்போது சேதுபதி படத்தின் டைரக்டர் இவரை பார்த்து வீடியோ எடுத்து விட்டாராம். படத்தில் ஒரு கேரக்டர் இருக்கிறது நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறிவிட்டாராம்.அந்தப் படத்தில் இருந்து அவருடைய சினிமா வாழ்க்கை தொடங்கியதாம்.
சேதுபதி படத்திற்குப் பின் ஆடை, பொன்மகள் வந்தாள், நம்மவீட்டுப்பிள்ளை வால்டர் என ஏகப்பட்ட படங்களில் வாய்ப்புகள் வந்தனவாம். சேதுபதி படத்தில் இவர் “யோவ் சேதுபதி வரும்போது சேவ் பண்ணிட்டு வாயா”என்று கூறும் வசனம் பட்டி தொட்டியெல்லாம் சென்றடைந்தது.
தற்போது ஸ்ரீனிவாசன் பஹீரா, கோப்ரா, அண்ணாத்த, சரவணன் அருள் நடிக்கும் புதிய படம் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாராம். எந்தவித கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க தயார் என்றும், நடிக்க வேண்டாம் திரையில் வந்து நின்றாலே போதும் மக்கள் சிரித்து விடுவார்கள் என்றும் குழந்தைத்தனமாக பேசுகிறார் மனிதர்.