புத்த மதம் என்றாலே அமைதி, பொறுமை, தியானம், துறவு போன்றவை தான் நமது எண்ணங்களாக இருக்கும். ஆனால் இவற்றுக்கெல்லாம் நேர்மாறாக பேய் கோயில் ஒன்றை வழிபட்டு வருகின்றனர் புத்த மதத்தினர்.
தாய்லாந்தில் இருக்கும் ஹால் ஹாரியர் பார்க்(Hell horror park) என்ற இடம் தீய சக்திகளை விரட்டும் இடமாக திகழ்ந்து வருகிறது.
இங்குள்ள சிலைகள் எல்லாம் மிகவும் கொடூரமான தோற்றத்தில் அமைந்துள்ளன, வழிபாடுகள் பெரிதாக இல்லை என்ற போதிலும் திருமணம், பிறந்தநாள் போன்ற சிறப்பு நாட்களில் இங்கு வந்து இளம் வயதினர் வணங்கி செல்கின்றனர்.
இங்கு நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் போன்ற சிலைகள் அதிகமாக இருக்கின்றன. இங்கு மிக கொடூரமாக படுக்க வைத்து உடலை ரம்பத்தால் அறுத்து குத்திக் கொன்று உடலை வெளியே உருவி எடுப்பது, மரத்தில் ஏறி தொங்கும் பேய்கள் போன்ற பொது சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி நரகத்திற்கு எதிரான சொர்க்கம் எப்படி இருக்கும் என்பதையும் வெளிக்காட்டும் சிலைகளும் இருக்கின்றன. இந்த கோயில் தீமை செய்தால் என்ன தண்டனை கிடைக்கும், நன்மை செய்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை புரியவைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
சில சிலைகள் நமது கிராமங்களில் இருக்கும் அய்யனார் சிலைகள் போன்ற தோற்றமும் கொண்டுள்ளது. பல சிலைகள் பார்த்தாலே, பயம் நம்மை முழுமையாக ஆக்கிரமிக்கும் அளவிற்கு மிகவும் கொடூரமான தோற்றத்தில் இருக்கின்றன.