வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தல 62 இயக்குனர் இவரா? அப்ப வினோத்துக்கு டாட்டா தான்

தல அஜித் நடிப்பில் அடுத்ததாக வலிமை படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தை நேர்கொண்டபார்வை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியிருக்கும் வலிமை படத்தை போனிகபூர் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

இதே கூட்டணி தான் தற்போது தல 61 படத்திலும் பணியாற்றி வருகிறது. தல 61 படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் அனைத்தும் முடிவடைந்து சூட்டிங் செல்ல ரெடியாக இருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து தல 62 படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்று கேள்வி கோலிவுட் வட்டாரங்களில் எழுந்துள்ளது. தல அஜித் எப்போதுமே தன்னுடன் நெருங்கி பழகும் இயக்குனர்களுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கொடுப்பார் என்பது தெரிந்ததுதான்.

அப்படித்தான் சிறுத்தை சிவாவை தொடர்ந்து இளம் இயக்குனர் வினோத்துக்கு தொடர்ந்து 3 படங்கள் வாய்ப்பு கொடுத்துள்ளார். தற்போது வினோத்துக்கு பிறகு அடுத்தது யாருடன் கைகோர்க்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் அதற்கான விடையும் ஒரு யுகமாக தெரியவந்துள்ளது.

அவர் வேறு யாரும் இல்லை விஜய் சேதுபதிக்கு சில்பா என்ற கதாபாத்திரத்தை கொடுத்த தேசிய விருது வாங்கும் வரை அழைத்துச் சென்ற இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில்தான் 62 படம் உருவாக்கப் போவதாக இப்போ கோலிவுட் வட்டாரங்களில் ஒரு பெரிய தகவல் வெளிவந்துள்ளது.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக தல அஜித்தின் கேரியரில் இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் இல்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தியாகராஜன் குமாரராஜா இதுவரை ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் என்ற இரண்டு படங்களை மட்டுமே எடுத்துள்ளார்.

ஆனால் இந்த இரண்டு படங்களுமே ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்து உள்ளன என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. தல அஜித் ஏற்கனவே சொன்னது போல் இனிமேல் நடிகைகளுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதை குறைத்து விட்டு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க முடிவு செய்துவிட்டார் என்பது இதில் இருந்து தெரிகிறது.

Trending News