வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தம்பி, உன் நடிப்பு வேற லெவல்.. இளம் நடிகரை புகழ்ந்து தள்ளிய அஜித்

சமீபகாலமாக மூத்த நடிகர்கள் பலரும் தங்களுடைய படங்களில் நடிக்கும் நடிகர்கள் தங்கள் இம்ப்ரஸ் செய்யும் விதமாக நடித்து விட்டால் உடனே கூப்பிடு பாராட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுவும் ஒரு வகையில் நல்லதுதான். அந்த வகையில் சமீபத்தில் அஜித் சக நடிகர் ஒருவரை மூச்சுக்கு முன்னூறு தடவை புகழ்ந்து பாராட்டியது வைரலாகி வருகிறது.

கடைசியாக அஜித் நடிப்பில் 2019ஆம் ஆண்டு விஸ்வாசம் மற்றும் நேர்கொண்டபார்வை என்ற இரண்டு படங்கள் ஒரே வருடத்தில் வெளியாகி இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. ஆனால் அதன் பிறகு கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகியும் அஜித்தின் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. இப்போது தான் அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் உருவாகி வந்த வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பொங்கலுக்கு வெளியாவதை உறுதிசெய்துள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு அஜித்தின் வலிமை படத்திற்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடவேண்டிய ஒன்று. வலிமை படத்தின் போஸ்டர்கள் பாடல்கள் மற்றும் பிலிம்ஸ் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஒருவிதமான வெறியை ஏற்றி விட்டது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அனைத்தும் தரமாக அமைந்துள்ளது.

சமீபத்தில் தல அஜித்துக்கு வலிமை படத்தை போட்டு காட்டியுள்ளார் வினோத். மேலும் படம் நன்றாக வந்திருப்பதாகவும் கண்டிப்பாக இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்பதையும் உறுதி செய்து வினோத்துக்கு வாழ்த்துகள் தெரிவித்த அடுத்த பட வாய்ப்பையும் கொடுத்து விட்டார் அஜித். அந்த படத்துக்கான வேலையும் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

valimai-ajith
valimai-ajith

இது ஒருபுறமிருக்க வலிமை படத்தில் தல அஜீத்துக்கு சமமான வில்லன் வேடத்தில் நடித்துள்ளவர் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா. வலிமை படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிக வலிமையாக இருப்பதாகவும் அவருடைய கதாபாத்திரம் மிகவும் பிடித்திருப்பதாகவும் கார்த்திகேயனுக்கு போன் பண்ணி வாழ்த்துக்களை தெரிவித்து சினிமாவில் நீங்கள் ஒரு உச்சத்தை அடைவீர்கள் என்று கூறி அவரை பெருமைப்படுத்தி விட்டாராம்.

Trending News