வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கழுத்தை நெரித்த கடன்.. அஜித் தப்பித்தது இப்படித்தான் என்ற சசிகுமார்

இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வரும் தல அஜித் ஒரு காலத்தில் பெரிய கடனாளியாக தான் இருந்தார் எனவும் அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வந்தார் என்பதையும் சசிகுமார் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தல அஜித்தின் சினிமா கேரியர் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எடுத்தவுடனே சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்துக்கு வரவில்லை. அவரும் பல இடங்களில் முட்டிமோதி பல தோல்விகளை சந்தித்து படங்களில் சிக்கி சின்னாபின்னமாகி பின்னர்தான் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இன்று அதில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார்.

அஜித் தன்னுடைய கேரியரின் ஆரம்ப கட்டத்தில் சாக்லேட் பாய் இமேஜை தக்க வைத்துக் கொண்டு ஓரளவு வெற்றிப் படங்களில் நடித்து வந்தார். ஆனால் இடையில் மாஸ் ஹீரோவாக மாறன் நினைத்தவருக்கு பெரிய அடி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல படங்கள் படுதோல்வியை சந்தித்தது. வியாபார ரீதியாக அஜித்தின் படங்கள் அநியாயத்திற்கு கீழே சென்று விட்டன.

இவ்வளவு ஏன் அஜித்தின் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் எனும் அளவுக்கு அவரது கேரியர் மிகவும் மோசமான கட்டத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து அஜித்தை வைத்து படம் எடுக்க முன் வந்த நிலையில் பல படங்கள் தோல்வியை சந்தித்ததால் பெரிய கடனுக்கு உள்ளானார் தல அஜித்.

ஆனால் அஜித் மனம் தளராமல் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து ஓரளவு சம்பாதித்து கடனை அடைத்து தற்போது மிகப்பெரிய உச்சத்தை அடைந்து உள்ளார். இந்த தகவலை பிரபல நடிகர் சசிகுமார் சமீபத்தில் எம்ஜிஆர் மகன் படத்தின் புரமோஷன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

sasikumar in pagaivanukku arulvai

சசிகுமாரும் கடந்த சில வருடங்களாக தன்னுடைய நெருங்கிய உறவினரின் கடனை தன் தலையில் சுமத்திக் கொண்டு அதற்கு கடுமையாக உழைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சசிகுமார் நடிப்பில் அடுத்தடுத்து எம்ஜிஆர் மகன் நேரடியாக ஹாட்ஸ்டார் தளத்திலும் ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய படங்கள் தியேட்டரிலும் விரைவில் வெளியாக உள்ளது.

Trending News