தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது வலிமை படத்தின் அப்டேட். தல அஜித், போனி கபூர், H.வினோத் கூட்டணியில் உருவாகி கொண்டிருக்கும் வலிமை படத்தின் அப்டேட்டை உலகம் முழுவதும் திரும்பி பார்க்க வைத்துள்ளனர் தல ரசிகர்கள்.
சேப்பாக் ஸ்டேடியத்தில் அஜித் ரசிகர்கள் செய்த அட்டூழியம் என்னவென்றால் இங்கிலாந்து வீரரான மோயீன் அலி, அஷ்வினிடம் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டுள்ளனர்.

தற்போது அதையும் தாண்டி ஒரு படி மேல் சென்று பிரதமர் மோடி நேற்று சென்னைக்கு வருகை தந்துள்ளார். அப்போது கூட பிரதமர் மோடியிடம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டுள்ளனர் அஜித் ரசிகர்கள்.
இந்த சம்பவத்தை அடுத்து #ValimaiUpdate என்ற ஹஷ்டாக் டிரென்ட் செய்து வருகின்றனர். இப்படி இந்திய அளவில் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு போனிகபூர் விரைவில் ஒரு அப்டேட் கொடுப்பார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில தினங்களுக்கு முன்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி படத்திற்கான விளம்பரம் துளிகூட தேவைப்படாத போல, ஏனென்றால் ரசிகர்களே உலக அளவில் வலிமை படத்தின் ஆர்வத்தை தூண்டி வருகின்றனர். இது எதுல போய் முடிய போகிறதோ என்பது தெரியவில்லை.