தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தல அஜித் இதுவரை கிட்டத்தட்ட 60 படங்கள் நடித்துள்ளார். ஆனால் அவரது மகன் ஆத்விக்கு இதுவரை அஜித் நடிப்பில் வெளியான இரண்டே இரண்டு படங்கள்தான் ஃபேவரைட்டாம்.
எந்த ஒரு சினிமா வட்டாரத்திலும் தல அஜித் போல் தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்திருந்தால் இந்நேரம் சினிமாவை விட்டே காணாமல் போயிருப்பார்கள். இதை தல அஜித்தே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அதையெல்லாம் மீறி ரசிகர்கள் வைத்த நம்பிக்கை காரணமாக தற்போது தொடர்ந்து வெற்றிப் படங்களாக ரசிகர்களுக்கு பரிசளித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் தல அஜீத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தல அஜித் நெருங்கிய வட்டாரத்திலிருந்து ஒரு பத்திரிக்கை ஒன்றுக்காக தல அஜித்தின் மகன் ஆத்விக் உடன் சிறிய பேட்டி கண்டுள்ளனர்.
அதில் அப்பா அஜித் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படங்கள் எவை? என கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு ஆத்விக், தல அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்கள் தான் என்னுடைய ஃபேவரைட் என குறிப்பிட்டுள்ளாராம்.
அஜித்தின் இந்த இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக பின்னி பெடலெடுத்து குறிப்பிடத்தக்கது. மேலும் தல அஜித்தின் வலிமை படம் தற்போது உருவாகி வருகிறது. ஒருவேளை வலிமை படம் வெளியான பிறகு வலிமை படமும் ஆத்விக் லிஸ்டில் இணைய அதிக வாய்ப்பு இருக்கிறதாம்.