வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அஜித்தை புகழ்ந்து பேசுனது ஒரு குத்தமா.? சாந்தனுவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

இயக்குனரும், நடிகருமான பாக்கியராஜின் மகன் சாந்தனு வெறித்தனமான விஜய் ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவரது திருமணத்தில் கூட நடிகர் விஜய் தான் தாலி எடுத்துக் கொடுத்தார்.

மேலும், சமீபத்தில் வெளியான விஜயின் மாஸ்டர் படத்தில் சாந்தனு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான அஜித் படத்தின் வலிமை போஸ்டரை வெளியிட்ட சாந்தனு, “தல இந்தப் படத்தில் ஸ்மார்ட் லுக்கில் இருக்கிறார்” என்று பதிவு செய்துள்ளார்.

இதைக் கண்ட அஜித் ரசிகர்கள், “நீங்க விஜய் ரசிகராச்சே, எதுக்கு எங்க தலயைப் பத்தி பேச்சு” என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதை சற்றும் எதிர்பார்க்காத சாந்தனு விழிபிதுங்கி உள்ளார். இது என்னடா வம்பா போச்சு.

நல்லது சொன்னாலும் அதை தப்பாவே புரிஞ்சுக்குறாங்க. சோசியல் மீடியா என்ன பேசினாலும் தப்பாகுது என புலம்பியுள்ளார். இருந்தாலும் இவர் மீதான விமர்சனங்கள் ஓய்ந்தபாடில்லை. உடனே, “தல லுக் எனக்குப் பிடிச்சிருக்கு, அவ்வளவுதான்” என்று கூறி பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் சாந்தனு.

Ajith valimai
Ajith valimai

இருந்தாலும் அஜித் ரசிகர்களுக்கு தைரியம் அதிகம்தான். ஒரு பெரிய ரவுடி பார்கவையே (சாந்தனு) புலம்ப வச்சுட்டாங்களே. பாவம்யா அந்த மனுஷன்.

Trending News