தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தல அஜித். இவருக்கென தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
அதுமட்டுமில்லாமல், தல ரசிகர்கள் ஒவ்வொருவரும் அவ்வப்போது இணையத்தில் அஜித்தைப் பற்றி வரும் செய்திகளை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு, அதை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
அந்த வகையில் தல அஜித், அவருடைய மகளின் மேடை நடிப்பை கீழே நின்று பார்த்துக்கொண்டிருந்த வீடியோவை அவருடைய ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.
அதாவது தல அஜித், நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர்.
தற்போது அனோஷ்கா பள்ளியில் படித்து வருவதோடு, தந்தையைப் போலவே பல்வேறு விஷயங்களில் தன்னுடைய ஈடுபாட்டை காட்டி வருகிறார்.
அந்தவகையில் அனோஷ்கா தனது சிறுவயதில், பள்ளியில் மேடை நாடகம் ஒன்றில் நடித்துள்ளார். அதனை தல அஜித் கீழே நின்று பார்த்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் தல அஜித்தின் மகள் நடித்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.