வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தளபதி படத்தை பார்த்த பின்பு தல அஜித்தின் தோழி போட்ட பதிவு! வைரலாகும் போஸ்ட் இதோ

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் பல எதிர்ப்புகளை தாண்டி பொங்கலன்று ரிலீசாகி திரையரங்குகளுக்கு புத்துயிர் அளித்தது.

அதேபோல் வெளியான பத்து நாட்களிலேயே 200 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது. இதனால் தளபதி விஜய்யை தியேட்டர் ஓனர்கள் பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி என்றே கூற ஆரம்பித்துவிட்டனர். இது ஒருபுறமிருக்க தற்போது தளபதியின் மாஸ்டர்  படத்தை பார்த்துவிட்டு தல அஜித்தின் தோழி ட்வீட் ஒன்றை போட்டு இருப்பதாகவும், அந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கி  ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது.

master-twit-cinemapettai

அந்த வகையில் தற்போது அமேசான் ப்ரைம் மூலம் தல அஜித்தின் ரேஸ் தோழியான அலிஷா அப்துல்லா பார்த்ததோடு படத்தைப் பற்றிய தனது அபிப்ராயத்தை இணையத்தில் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில் அலிசா, ‘விஜய்யும், விஜய் சேதுபதியும் பிரம்மாண்டமாக நடித்திருப்பதாகவும் அவர்களுடைய வசனம் சூப்பராக இருந்ததாகவும், சாந்தனு தன்னுடைய ரோலை மிக சிறப்பாக செய்திருந்தார்’ என்றும் அலிசா குறிப்பிட்டிருக்கிறார்.

shanthnu-twit

இந்தப் பதிவிற்கு சாந்தனு நன்றி கூறி ட்வீட் போட்டிருக்கிறார். மேலும் தல அஜித் தோழியின் இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு தளபதி ரசிகர்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

Trending News