2019ஆம் ஆண்டு தல அஜித்தின் நடிப்பில், ஹெச் வினோத் எழுதி இயக்கிய சூப்பர் ஹிட் படமான நேர்கொண்டபார்வை படத்தினை போனிகபூர் தயாரித்திருந்தார். இவர்களது கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் கைகோர்த்துள்ளது.
இந்தப்படத்தின் அறிவிப்பு வெளியாகி ஒரு வருட காலத்திற்கு மேலாகியும் படத்தை பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராததால் வெறியேறியுள்ளனர் தல ரசிகர்கள். மேலும் தல அஜித் நடிப்பது மட்டுமல்லாமல் பைக் மற்றும் கார் ரேஸ்ஸில் அதிக ஆர்வம் காட்டுவார்.
இவர் எப்போதும் ஒரு படத்தை முடித்து விட்டு, அதன் பிறகு அவருக்கு மன நிறைவு தரும் பைக் மற்றும் கார் ரேஸில் அதிக ஈடுபாடு காட்டுவார்.
இந்த சூழலில் தற்போது தல அஜித் விரைவில் வலிமை பட சூட்டிங்கை முடித்தவுடன், அவருக்கு மிகவும் பிடித்தமான பைக் ரேஸ்க்கு தயாராகி வருவதாக தகவல்கள் இணையத்தில் கசிகிறது.
அதுமட்டுமில்லாமல் கூடிய விரைவில் படப்பிடிப்பு முடித்தவுடன், வலிமை படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழு வெளியிட உள்ளது.
ஆகையால் தல அஜித், பைக் மற்றும் கார் ரேஸ்ஸிங் நண்பர்களுடன் சமீபத்திய எடுத்திருக்கும் புகைப்படம் ஆனது தற்போது சோசியல் மீடியாவில் அவருடைய ரசிகர்களால் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வருகிறது.