புதன்கிழமை, ஜனவரி 8, 2025

மனைவியின் ஆசையை நிறைவேற்றும் தல தோனி.. தயாரிப்பாளராகவே ஜெயிக்கல, இதுல இது வேறயா!

Producer Dhoni: கிரிக்கெட் விளையாட்டுக்கு ஆணிவேராக தலைசிறந்த விளங்கிய எம்எஸ் தோனி தற்போது சினிமாவிலும் கால் பதித்து விட்டார். அதற்கு அடித்தளமாக தோனி என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகம் செய்து அதன் மூலம் எல்ஜிஎம் என்ற படத்தை தயாரித்தார். கிரிக்கெட்டில் என்னதான் கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்து இருந்தாலும், சினிமாவில் இதன் மூலம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

அதற்கு காரணம் இவர் தயாரித்த படம் தற்போது வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படிப்பட்ட படத்தை எதற்காக தோனி தயாரித்தார் என்று சொல்லும் அளவிற்கு படம் எடுபடவில்லை. இதற்கு இந்த படம் வெளிவந்திருக்க தேவையே இல்லை என்று பலரும் அவர்களுடைய விமர்சனங்கள் அத்தனையையும் தோனி மேல் திணித்து வருகிறார்கள்.

Also read: LGM Movie Review- தோனி, ஹரிஷ் கல்யாண் கூட்டணி ஒர்க் அவுட் ஆனதா? எல்ஜிஎம் முழு விமர்சனம் இதோ!

ஆனால் இவர் உண்மையிலேயே எதற்காக இப்படத்தை தயாரித்தார் என்பது இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்திருக்கிறது. அதாவது இவர் பெயருக்காக தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இதன் மூலமாக சினிமாவில் இவருடைய முத்திரையை பதிப்பதற்காக தான் இப்படி ஒரு அவதாரத்தை பயன்படுத்தி இருக்கிறார்.

இவருடைய நோக்கமே வேற, இந்தப் பயணத்தை தொடங்கி இதை வைத்து நடிக்க வருவது தான் அவருடைய எண்ணமே. இதற்கு அடுத்து இவர் மனைவி ஆசைப்பட்ட மாதிரி ஆக்சன் ஹீரோவாக களமிறங்க போகிறார். இதை இவருடைய மனைவி தற்போது அளித்த பேட்டியில் தெள்ளத் தெளிவாக கூறியிருக்கிறார்.

Also read: நா என்ன காரா, பைக்கா பழகி பார்த்து ஓகே சொல்றதுக்கு.. ட்ரெண்டாகும் தோனியின் LGM ட்ரெய்லர்

அதாவது இவருடைய மனைவிக்கு, தோனி தமிழில் கொடி கட்டி பறக்க வேண்டும் என்பதுதான் ஆசை. அதற்காகத்தான் தயாரிப்பாளராக நுழைந்தார். இதைத் தொடர்ந்து இனிமேல் இவருடைய முழு கவனமும் நடிப்பதில் மட்டும்தான் இருக்குமாம் . அதுவும் தமிழில் மட்டும் தான், ஹிந்தி எல்லாம் வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறோம் என்று இவருடைய மனைவி கூறி இருக்கிறார்.

ஏற்கனவே இவர் தயாரித்த படத்திற்கு விமர்சனங்கள் மோசமாக வந்து கொண்டிருக்கையில், தற்போது ஹீரோவாக நடிக்கும் படங்கள் எந்த மாதிரி இருக்கும் என்று பல கேள்விகளை எழுப்புகிறது. அப்படியே இவர் ஹீரோவாக நடித்தால் ரசிகர்கள் பார்த்து சிரிக்கும் படியாக தான் இருக்கும் என்று பலரும் இவரைப் பற்றி விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். இவருடைய ஹீரோ பயணம் இவருக்கு கை கொடுக்குதா என்று பார்க்கலாம்.

Also read: அடடா இந்த சாக்லேட் தம்பி இவ்வளவு படம் நடித்து முடித்து விட்டாரா.. தோனி கூட இருந்தாலே சக்சஸ் தான் போல

Trending News