வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

Thalaimai Seyalagam Review: வசந்தபாலனின் அரசியல் திரில்லர் வெப் சீரிஸ்.. தலைமைச் செயலகம் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Thalaimai Seyalagam Review: திரைப்படங்களை விட ஓடிடியில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு இப்போது நல்ல மவுசு இருக்கிறது. அதனாலயே கொஞ்சம் மார்க்கெட் குறைந்த ஹீரோக்கள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இப்படி பல வெப் தொடர்கள் ஹிட் ஆன நிலையில் தற்போது இயக்குனர் வசந்தபாலனின் தலைமைச் செயலகம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. அரசியல் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த சீரிஸ் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

இரண்டு கதைகள் ஒரே நேர் கோட்டில் பயணிப்பது தான் இந்த சீரிஸின் மையக்கரு. அதாவது ஜார்கண்ட் மாநிலத்தில் திருட்டு பட்டம் கட்டப்படும் பெண் ஒருவரை கிராமத்தினர் கொடூரமாக தாக்குகின்றனர். அதன் இறுதியில் அப்பெண் ஆவேசமாக அனைவரையும் வெட்டி சாய்க்கிறார்.

அரசியல் திரில்லர்

அதைத்தொடர்ந்து காணாமல் போகும் அவரை காவல்துறை பதினைந்து வருடங்களாக தேடி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க முதல்வராக இருக்கும் கிஷோர் மீது ஊழல் வழக்கு இருக்கிறது.

தீர்ப்புக்காக காத்திருக்கும் அவர் அடுத்து அரசியல் வாரிசாக யாரை அமர்த்தலாம் என்ற யோசனையிலும் இருக்கிறார். ஆனால் அந்த நாற்காலிக்கு அவருடைய மகள், மருமகன் என அனைவரும் ஆசைப்படுகின்றனர்.

இந்த இரண்டு கதைகளும் ஒரே இடத்தில் சந்திக்கிறது. அதன் பிறகு நடக்கும் பல விஷயங்கள் திரில்லிங்காக சொல்லப்பட்டிருக்கிறது. அதன் படி இயக்குனர் எடுத்திருக்கும் கதைகளம் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் உள்ளது.

அதற்கேற்றார் போல் நடிகர்களும் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர். மேலும் அரசியல் கதைக்கேற்ற வசனங்களும் சிறப்பாக உள்ளது. இப்படி இருக்கும் இந்த வெப் தொடரில் அதிகபட்ச நீளம், சில குழப்பமான காட்சிகள் போன்ற குறையும் இருக்கிறது. ஆனாலும் இந்த அரசியல் வெப் சீரிஸ் ரசிக்கும் படியாக தான் இருக்கிறது.

Trending News