திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Thalaimai Seyalagam: காபி, டீ, மதுவை விட பெரிய போதை அரசியல் தான்.. தலைமைச் செயலகம் ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

Thalaimai Seyalagam Trailer: அரசியல் களத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள தலைமைச் செயலகம் வெப் தொடரின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. வசந்தபாலன் இயக்கத்தில் பரத், ரம்யா நம்பீசன், கிஷோர், ஸ்ரேயா ரெட்டி என பலர் இதில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இதன் டீசர் வெளிவந்த நிலையில் ட்ரெய்லர் எப்படி இருக்கு என்பதை இங்கு காண்போம். இதன் ஆரம்பத்திலேயே டீ காபி மதுவை விட அரசியல் தான் பெரிய போதை என வசனத்தோடு தொடங்குகிறது.

அதைத்தொடர்ந்து ஊழலுக்கு எதிரான மக்கள், கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றப் போராடும் மேலிடம் என ட்ரெய்லர் விறுவிறுப்பாக செல்கிறது. இதில் ஹிந்தி கத்துக்கிட்டா தான் என்ன என வரும் வசனம் தற்போதைய அரசியலை காட்டுகிறது.

மேலும் அரசியல்வாதியாக வரும் கிஷோர், போலீசாக வரும் பரத் என ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர். அதன்படி இந்த வெப் தொடர் வரும் 17ஆம் தேதி ஜீ 5 தளத்தில் வெளியாகிறது.

ஏற்கனவே இது போன்ற அரசியல் பின்னணி வெப் தொடர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் இந்த தலைமை செயலகமும் இணையும் என்று எதிர்பார்க்கலாம்.

Trending News