சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

பயங்கரமாக திட்டமிடும் நெல்சன்.. லீக்கான தலைவர்- 169 படத்தின் கதை

பீஸ்ட் திரைப்படத்தால் பல நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து கொண்டிருக்கும் இயக்குனர் நெல்சன் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து தலைவர் 169 படத்தை இயக்க இருக்கிறார். முந்தைய திரைப்படத்தில் நடந்த தவறுகள் எதுவும் இந்த படத்தில் நடந்து விடக்கூடாது என்பதற்காக அவர் மிகவும் கவனமாக ஒவ்வொன்றையும் செய்து வருகிறார்.

மேலும் இப்படத்தின் கதை குறித்த ஸ்கிரிப்ட் அனைத்தையும் நெல்சன் ரஜினியிடம் ஏற்கனவே கொடுத்துவிட்டார். அதில் சில திருத்தங்களை செய்ய சொன்ன ரஜினி தற்போது முழு கதையையும் படித்துவிட்டு திருப்திகரமாக இருப்பதாக கூறியிருக்கிறார்.

இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக ஆரம்பிக்கப்பட இருக்கிறது. சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்க இருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் கதை இதுதான் என்ற ஒரு தகவல் தற்போது பரவி வருகிறது. அதாவது இந்த கதை களம் சிறை மற்றும் சிறை கைதிகளை மையப்படுத்திதான் எடுக்கப்பட இருக்கிறதாம். இதற்காக பல கோடி செலவில் பிரம்மாண்டமாக செட் போடப்பட்டு வருகிறது.

விரைவில் அது குறித்த காட்சிகளை படமாக்குவதற்கு தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்திற்குள் தொடங்கப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களிடம் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை.

அதனால் இந்தப் படத்தை சற்று கூடுதல் கவனத்துடன் இயக்குமாறு ரஜினி நெல்சனுக்கு ஆர்டர் போட்டிருக்கிறார். அதன்படி அவரும் இந்த படத்தை எந்த பிரச்சனையும் இல்லாமல் இயக்குவதற்கு பயங்கரமாக திட்டமிட்டுள்ளார். முன்னதாக ரஜினியின் நடிப்பில் வெளிவந்த சிவாஜி, கபாலி போன்ற திரைப்படங்களில் ஜெயில் குறித்த காட்சிகள் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. அந்த வகையில் இந்தத் திரைப்படமும் ரசிகர்களால் ரசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News