வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஜெயிலர் படம் எல்லாம் சும்மா ட்ரைலர் தான்.. தலைவர்-170 யில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா?

Thalaivar 170: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகிய பட்டி தொட்டி எங்கும் அதகளப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் வரும் பத்தாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் பாடல், இசை வெளியீட்டு விழா, டிரைலர் என அடுத்தடுத்து ரசிகர்களை உற்சாகத்தில் திக்கு முக்காட வைத்துக் கொண்டிருந்த ரஜினி, தற்போது தலைவர் 170 பட வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்.

ரஜினி தன்னுடைய 170 ஆவது படத்தில் இயக்குனர் ஞானவேலுடன் இணைகிறார். இவர் சூர்யாவின் ரத்தசரித்திரம் படத்திற்கு திரைக்கதை எழுதி பெண் நடிகர் சூர்யா மற்றும் மணிகண்டனின் நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தை இயக்கியவர் தற்போது இவருக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

Also Read:எங்க சிங்கத்தை அசிங்கப்படுத்திட்டியே நெல்சா.. ஜெயிலர் வீடியோவை பார்த்துட்டு கொத்து பரோட்டா போட்ட பயில்வான்

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்த கையோடு தலைவர் 170 படத்தின் வேலைகளுக்காக களமிறங்கி விட்டார் ரஜினி. இன்று சென்னையில் இந்த படத்திற்கான டெஸ்ட் லுக் நடந்திருக்கிறது. அது சம்பந்தப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. மேலும் படத்தில் மற்றும் ஒரு நடிகர் இணைய இருப்பதாகவும் இன்று தான் அப்டேட் வெளியாகி இருக்கிறது.

                                                                 தலைவர் 170 டெஸ்ட் லுக் புகைப்படம்

Thalaivar 170 test look
Thalaivar 170 test look

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்க இருப்பது ஏற்கனவே உறுதியாக இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி மற்றும் அமிதாப்பை ஒரே ஸ்கிரீனில் பார்ப்பதற்கு ரசிகர்களும் காத்துக் கிடக்கின்றனர். இன்று வெளியான அப்டேட்டில் இந்த படத்தில் தெலுங்கு உலகின் முன்னணி நடிகர் நானி இணைந்திருக்கிறார் என செய்திகள் வெளியாகி இருக்கிறது.

Also Read:விஜய்யைப் பார்த்து காப்பியடித்த ரஜினி.. வாண்டடாக கண்டன்ட் கொடுத்த சூப்பர் ஸ்டார்

நடிகர் நானி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். இவர் இந்த படத்தில் கெஸ்ட் ரோல் பண்ண இருப்பதாகவும் இருபது நிமிட காட்சிகளுக்கு மட்டும் வருவார் எனவும் சொல்லப்படுகிறது. ஜெயிலர் படம் எப்படி ரஜினிக்கு மாஸ் மற்றும் ஆக்சன் ஆக அமைந்ததோ, இந்த படம் ரஜினியின் நடிப்புக்கு தீனி போடும் விதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் 170 ஆவது படம் அவருடைய ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்திருக்கிறது. அதாவது இந்த படத்தில் நடிப்பதற்காக லைக்கா ஆடிசன் நடத்த இருக்கிறது. ஏற்கனவே நடிப்பு பயிற்சி பெற்றவர்கள், நடிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த ஆடிசனில் கலந்து கொள்ளலாம் என லைக்கா அறிவித்திருக்கிறது.

Also Read:சத்தமே இல்லாமல் கருத்துக்கணிப்பில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த ஹீரோ.. லயோலா காலேஜ் வெளியிட்ட ரிப்போர்ட்

Trending News