ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அடுத்தடுத்து வெளியாகும் தலைவர் 170 அப்டேட்.. ரிலீஸ் எப்போ தெரியுமா?

Thalaivar 170 Release Date: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு அடுத்து ஜெயிலர் படம் ரிலீஸ் ஆக காத்திருக்கிறது. வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் அட்வான்ஸ் புக்கிங் உலகம் முழுவதும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. நேற்று இந்த படத்தில் விக்னேஷ் சிவன் எழுதிய ரத்தமாரே பாடல் லிரிக்கல் வீடியோ வெளியாகி இணையத்திலும் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

ஜெயிலர் படத்தின் ரிலீசுக்கு முன்பே சூப்பர் ஸ்டார் நடிக்கும் 170 ஆவது படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ரஜினி இயக்குனர் ஞானவேலுடன் இணைகிறார். ஞானவேல் இயக்கத்தில் ஏற்கனவே ஜெய் பீம் படம் ரிலீஸ் ஆகி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read:2கே கிட்ஸ் பார்க்க வேண்டிய ரஜினியின் 15 வெற்றி படங்கள்.. தலைவன் நடிப்பை பார்த்து மெய்சிலிர்த்து போவீங்க

தலைவர் 170 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாக தகவல்கள் உறுதியான நிலையில், மல்டி ஸ்டார் கூட்டணியாக நானி, பகத் பாசில், மஞ்சு வாரியர் ஆகியோரையும் படத்தில் இணைப்பதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவும் வாய்ப்பிருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக பேர தூக்க நாலு பேரு, பட்டத்தை பறிக்க 100 பேரு என அனல் பறக்கும் இசையை கொடுத்த அனிருத் தான் இந்த படத்திற்கும் இசையமைக்க இருக்கிறார். ரஜினி மற்றும் அனிருத் கூட்டணியில் அடுத்த சரவெடி பாடல்களை விரைவில் எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.

Also Read:ஓவர்சீஸ் பிசினஸில் சம்பவம் பண்ணும் முத்துவேல் பாண்டியன்.. எம்மாடியோவ்! ரிலீஸ் க்கு முன்பே இவ்வளவு கோடியா?

படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியான நிலையில், படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே ரிலீஸ் தேதியை பிளான் செய்திருக்கிறது படக்குழு. இந்த படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருக்கிறாராம். அதற்குள் சிங்கிள் போர்சனாக ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்க இருக்கிறார்களாம்.

இந்த படம் வரும் 2024 கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. 50 நாட்களுக்குள் இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகளை முடித்துவிட்டு, ரஜினிகாந்த் தன்னுடைய 171 வது படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைகிறார். இதுதான் அவருடைய கடைசி படம் என பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், சூப்பர் ஸ்டார் இன்னும் அதை உறுதிப்படுத்தவில்லை.

Also Read:100 மடங்கு உயர்த்திட்டு வசூல் அதிகம்னா நியாயமா?. அப்படி பார்த்தா படையப்பா வசூல் 3000 கோடி தான்

Trending News