திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஜெயிலர் சூட்டோடு அலப்பறை பண்ண வரும் தலைவர் 170.. லோகேஷ் மாதிரி பூஜை தேதியுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கும் படக்குழு

Thalaivar 170: சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் வெளியாகி இரண்டு வாரங்கள் முடிவதற்குள்ளாகவே மிகப்பெரும் வசூல் சாதனையை படைத்திருக்கிறது. சன் பிக்சர்ஸ்,, ரஜினி கூட்டணியில் சக்கை போடு போட்டு வரும் இப்படம் தற்போது வரை 550 கோடியை தாண்டி வசூல் வேட்டை நடத்தி இருக்கிறது.

இதற்கு முன்பாக கோலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸை கலக்கிய விக்ரம், பொன்னியின் செல்வன் போன்ற படங்களின் சாதனையை ஜெயிலர் இதன் மூலம் முறியடித்துள்ளது. இதை ரஜினி ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வரும் இந்த சூழலில் இமயமலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார் தற்போது புத்துணர்ச்சியோடு சென்னை திரும்பி இருக்கிறார்.

Also read: லியோ ரிலீஸுக்கு வந்த பெரும் சிக்கல், லோகேஷ் தலையில் விழுந்த இடி.. ஜெயிலர் வசூலை உடைக்க தளபதிக்கு வாய்ப்பு இல்லையாம்

அதைத்தொடர்ந்து தலைவரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை தான் பல மீடியாக்களும் உற்று நோக்கி வருகிறது. அந்த வகையில் ரஜினி அடுத்ததாக தலைவர் 170 படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஆயத்தமாகிறார். அதன்படி இப்படத்தின் பூஜை வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி லீலா பேலஸில் நடைபெற இருக்கிறது.

மிகவும் விமரிசையாக நடைபெறும் இந்த பூஜையை அடுத்து படப்பிடிப்பு செப்டம்பர் 19ஆம் தேதி ஆரம்பிக்கப்பட இருக்கிறது. அதைத்தொடர்ந்து படத்தை விரைவாக முடித்து அடுத்த வருட கோடை விடுமுறைக்கு வெளியிடவும் படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Also read: ஜெயிலர் படத்திற்கு சன் பிக்சர்ஸ் வாரி இறைத்த 130 கோடி சம்பள லிஸ்ட்.. வர்மனை விட மூன்று மடங்கு அதிகமாக வாங்கிய யோகி பாபு

இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பூஜை நடக்கும் அன்று வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ் லியோ பட பூஜை போடும்போதே ரிலீஸ் தேதியையும் மாஸாக அறிவித்திருந்தார். அந்த வரிசையில் தற்போது தலைவர் 170 படமும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுக்க இருக்கிறது.

மேலும் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஞானவேல் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அது மட்டுமின்றி ரஜினி இப்படத்தில் என்கவுண்டருக்கு எதிரானவராக நடிக்க இருக்கிறாராம். உண்மை சம்பவத்தின் தழுவலாக எடுக்கப்படும் இப்படம் இப்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

Also read: 500 கோடி வசூல் செய்தும் ஜெயிலரில் ரஜினிக்கு பிடித்தவர் இவர்தான்.. மாஸ் காட்டும் இல்லத்தரசிகளின் எதிரி

அது மட்டுமல்லாமல் இதில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஷர்வானந்த், பகத் பாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைய இருக்கின்றனர். இவ்வாறாக ஜெயிலர் வெளியான சூட்டோடு அடுத்த படத்தையும் ரிலீஸ் தேதியோடு அறிவித்து சம்பவத்திற்கு தயாராகும் ரஜினியின் அலப்பறையை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Trending News