வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

லோகேஷை திக்குமுக்காட வைத்த சன் பிக்சர்ஸ்.. ஜெயிலருக்கு டஃப் கொடுக்க வரும் தலைவர் 171

Lokesh-Thalaivar 171-Sun Pictures: சூப்பர் ஸ்டார் இப்போது அடுத்தடுத்த ப்ராஜெக்ட்டுகளில் பிஸியாக இருக்கிறார். ஜெயிலரின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அவர் நடித்திருக்கும் லால் சலாம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது. அதையடுத்து இப்போது அவர் லைக்கா தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 170ல் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் இதில் கைகோர்த்திருக்கும் நிலையில் இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒன்றாக இருக்கும் போட்டோக்களும் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க ரஜினியின் அடுத்த படமான தலைவர் 171 பற்றிய எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் எகிறி கொண்டு இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் போகிற போக்கில் படம் எல்சியூவில் வராது என்றும் தலைவருக்கான தனித்துவமான படம் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதுவே ரசிகர்களை குஷிப்படுத்திய நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் இதற்கான வேலைகளில் முழுமூச்சாக இறங்கி இருக்கிறதாம். அதன்படி தலைவர் 171 பட சூட்டிங் வரும் மார்ச் மாத இறுதிக்குள் தொடங்கப்பட இருக்கிறது.

Also read: வில்லாதி வில்லனாக வேட்டையாட போகும் ரஜினி.. லோகேஷ்க்கு கொடுத்த ஆறு மாசம் கெடு என்ன தெரியுமா.?

இதற்கான வேலையை தற்போது ஆரம்பித்திருக்கும் லோகேஷுக்கு சன் பிக்சர்ஸ் அவர்கள் தரப்பிலிருந்து சகல வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்களாம். அதிலும் எந்தவித நிபந்தனையோ, கட்டுப்பாடோ இல்லாமல் அவருக்கு முழு சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறார்களாம். அதன்படி பெசன்ட் நகரில் தற்போது மிகப்பெரிய ஆபீஸ் ஒன்று உருவாகி இருக்கிறது.

அங்குதான் இப்போது லோகேஷ் சொகுசாக உட்கார்ந்து தலைவருக்கான கதையை பார்த்து பார்த்து செதுக்கி கொண்டிருக்கிறாராம். மேலும் அவருக்காக மூன்று உதவியாளர்களையும் சன் பிக்சர்ஸ் நியமித்திருக்கிறது. யாராக இருந்தாலும் அவர்களை தாண்டி தான் லோகேஷை அணுக முடியும். தற்போது அனிருத்தும் அங்கு தான் இருக்கிறார்.

இப்படியாக மிகப்பெரும் சம்பவத்திற்கு தயாராகி வருகிறது சன் பிக்சர்ஸ். ஏனென்றால் சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் இன்டஸ்ட்ரியல் ஹிட் அடித்து பலரையும் வாயடைக்க செய்தது. தற்போது அதற்கே டஃப் கொடுக்கும் வகையில் தலைவர் 171 இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இவ்வளவு ஏற்பாடும் ஜோராக நடந்து வருகிறது. ஆக மொத்தம் கமலுக்கு ஒரு விக்ரம் என்றால் ரஜினிக்கு தலைவர் 171 என தயாராகி வருகிறார் லோகேஷ்.

Also read: எப்படியாவது தலைவர் ரஜினி கூட நடிக்கணும்.. வரிஞ்சு கட்டி வந்த 5 நடிகர்கள் ?

Trending News