புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தலைவர் 171 ரஜினியின் கடைசி படமா?. ரகசியம் உடைத்த லோகேஷ் கனகராஜ்

Thalaivar 171: ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி 600 கோடி வரை வசூலித்தது. அடுத்து ரஜினி நடிப்பில் லால் சலாம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடித்த இந்த படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இருந்தாலும் தமிழ்நாட்டில் முழுக்க இது ரஜினி படமாக தான் ப்ரொபோஸ் செய்யப்படுகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து ரஜினி ஜெய் பீம் படம் இயக்குனர் ஞானவேலுடன் இணைந்து தன்னுடைய 170 ஆவது படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் வள்ளியூர் மற்றும் பண குடி போன்ற பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது சம்பந்தப்பட்ட போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து ரஜினி தன்னுடைய 171 வது படத்தில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து படம் பண்ண இருப்பது தமிழ்நாட்டில் சின்ன குழந்தையை கேட்டால் கூட தெரிந்து விடும். அந்த அளவுக்கு இந்த படம் ஹைப் ஏற்றி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து ரிலீசாக இருக்கும் லியோ படத்தின் பிரமோஷனுக்காக அவர் நிறைய பேட்டிகளில் கலந்து கொள்கிறார்.

இந்தப் பேட்டிகளில் லோகேஷிடம் லியோவை பற்றி அதிக கேள்விகள் கேட்கப்பட்டாலும், எல்லோருடைய அடுத்த கேள்வியாக இருப்பது தலைவர் 171 தான். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் அந்த படத்தை பற்றி அதிகம் பேசக்கூடாது என்பதில் லோகேஷ் ரொம்பவும் உறுதியாக இருக்கிறார். சூப்பர் ஸ்டாரை பற்றி மட்டும் நிறைய விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

லியோ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் பொழுது ரஜினி, தனக்கு ஒரு கதை பண்ணும்படி லோகேஷ் இடம் கேட்டிருக்கிறார். முதலில் தன்னிடம் கதை இல்லை என்று சொன்ன லோகேஷ், பின்னர் ஒரு கதையை ரெடி பண்ணிக்கொண்டு ரஜினியை சந்தித்திருக்கிறார். கதையை முழுக்க கேட்டுவிட்டு ரஜினி சபாஷ் கண்ணா என்று சொல்லி பாராட்டினாராம்.

மேலும் பேசிய லோகேஷ் தலைவர் 171 தான் ரஜினியின் கடைசி படம் என்பதில் உண்மை இல்லை என்று சொல்லி இருக்கிறார். ரஜினியின் லிஸ்டில் அடுத்தடுத்த இயக்குனர்கள் இருக்கிறார்களாம். ரஜினியும் அடுத்து படம் பண்ணும் ஐடியாவில் தான் இருக்கிறாராம். ஆனால் தலைவர் 171 வேலைகள் முடிந்த பிறகு தான் அடுத்த படத்தின் அப்டேட் கொடுக்க வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறாராம்.

Trending News