வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

தலைவி படம் அரசியல் படம் அல்ல.. சீக்ரெட்டை போட்டு உடைத்த ஏ.எல்.விஜய்

தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கிரீடம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் ஏ.எல்.விஜய். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா, சைவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார்.

விஜய் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றதோடு, வசூலையும் வாரி குவித்தது. இதனால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்தார். தற்போது தமிழகத்தின் இரும்பு பெண்மணி என அழைக்கப்படும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்குனர் விஜய் இயக்கியுள்ளார்.

தலைவி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகி கங்கனா ரணாவத், அரவிந்த்சாமி, மதுபாலா, தம்பி ராமையா மற்றும் இயக்குநர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய இயக்குனர் விஜய் கூறியதாவது, “தலைவி அரசியல் படம் அல்ல. ஜெயலலிதாவின் வாழ்க்கை மற்றும் திரைப்பயணம் குறித்த படம். இதன் மூலம் எந்தவொரு அரசியலும் பேசப்படவில்லை. தனி ஒரு பெண்ணாக ஜெயலலிதா எவ்வாறு சினிமாவிலும், அரசியலிலும் ஜெயித்தார் என்பதை மட்டுமே இப்படம் மூலம் கூறியுள்ளோம்” எனக் கூறினார்.

thalavii
thalavii

மேலும் தலைவி படத்தை பல ஓடிடி நிறுவனங்கள் நேரடியாக வெளியிட முன்வந்தும் படத்தை திரையரங்கில் வெளியிட வேண்டும் என்பதற்காக காத்திருந்ததாக தயாரிப்பாளர் விஷ்ணுவர்தன் இந்தூரி கூறியுள்ளார். அரவிந்த் சாமி மற்றும் கங்கனா ரனாவத் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக அமைய உள்ள தலைவி படம் வரும் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

- Advertisement -spot_img

Trending News