தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் பல படங்கள் நடித்துள்ளார். ஆனால் ஆரம்ப காலத்தில் அவருக்கு வெற்றியாக இருந்த திரைப்படம் தளபதி.
இப்படம் வெளிவந்த காலத்தில் ரசிகர்களின் வரவேற்பால் இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ரஜினிகாந்துக்கு பெயரும் புகழும் வாங்கிக் கொடுத்தது.
இப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படத்தை மணிரத்தினம் இயக்கியிருந்தார்.
முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் பல நடிகர்கள் தேர்வாகியுள்ளனர். அப்படி தேர்வான நடிகர்கள் யார் என்பதையும் இப்படத்தில் நடிக்கவிருந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றியும் பார்ப்போம்.
தளபதி படத்தில் அரவிந்த்சாமி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வு ஆனது ஜெயராம் ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் பின்பு அரவிந்த்சாமி நடித்துள்ளார்.
மணிரத்தினம் இயக்கத்தில் அனைத்து படங்களுக்குமே முதலில் இளையராஜா தான் இசையமைத்து வந்தார். இந்த படத்திற்கு பிறகு தான் மணிரத்னம் ஏ ஆர் ரகுமான் சேர்ந்தார்.
இளையராஜா இசையில் வெளியான “ராக்கம்மா கையத்தட்டு” பாடல் அப்போது பாப்புலராக இருந்த பிபிசியில் ஓட்டிங் லிஸ்ட் இன் நம்பர் 1 இடத்தை பிடித்தது.
அந்த டைமில் இந்த படம்தான் பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் கிட்டத்தட்ட 3 கோடி செலவில் எடுக்கப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் அரவிந்த்சாமி இந்த திரைப்படத்தின் முதல் திரைப்படம்.