புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஒரு கேரக்டருக்கு அல்லோலப்படும் தளபதி-68.. ஆனாலும் லோகேஷ்-ஐ விட கிளவரா யோசிக்கும் வெங்கட் பிரபு

Thalapathy 68 Movie Update: லியோ-விற்கு பிறகு விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் சில தினங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை பார்த்தாலே அதில் நிறைய கேரக்டர்கள் இருப்பது தெரிகிறது.

ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் 25-வது படைப்பு தளபதி 68 என்பதால் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். அது மட்டுமல்ல லியோ படத்தை மிஞ்சும் அளவுக்கு வெங்கட் பிரபு தளபதி 68ல் தரமான சம்பவங்களை செய்திருக்கிறார்.

லியோவில் எப்படி நிறைய பிரபலங்களை இணைத்து அதில் சிலரை வெளியில் தெரியாமல் மறைத்து வைத்திருந்தார்களோ, அதே போலவே தளபதி 68லும் சஸ்பென்ஸ் கேரக்டர்கள் இருக்கின்றனர். ஏற்கனவே இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு, ஜெயராம், அஜ்மல், விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ், சினேகா மற்றும் லைலா என கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட பிரபலங்கள் இணைந்து இருக்கின்றனர்.

மேலும் இந்த படத்தில் விஜய் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதில் அப்பாவாக நடிக்கும் விஜய்க்கு இரண்டு பிள்ளைகள். விஜய் மற்றும் அவருடைய சகோதரி. தளபதிக்கு அடுத்ததாக இந்த சகோதரி கேரக்டர் தான் படத்தில் செம ஸ்ட்ராங்காக இருக்கும்.

அழுத்தமாக பேசப்படும் இந்த கேரக்டருக்கு யார போடுவது என வெங்கட் பிரபு அல்லோலப்பட்டு வருகிறார். ஆனால் நிச்சயம் லியோ படத்தில் விஜய்க்கு சகோதரி கேரக்டரில் மெடோனா செபாஸ்டினை போட்டு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத ஆளை லோகேஷ் தேர்ந்தெடுத்தார்.

ஆனால் வெங்கட் பிரபு லோகேஷ்-ஐ விட செம கிளவராக யோசித்து கொண்டிருக்கிறார். அதுவும் ஆறு மணி அவதாரத்தில் தான் மூளை நல்லா யோசிக்கும்னு ரூம் போட்டு சிந்திக்கிறார். இந்த கேரக்டரில் லவ் டுடே பிரபலம் இவானா நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

Trending News