லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு வெளிநாட்டில் முடிந்து தளபதி விஜய் சென்னை திரும்பினார். தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெட்கே நடித்து வருகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகிக்கொண்டிருக்கும் தளபதி படத்தின் தலைப்பு தற்போது வரை வெளியிடப்படவில்லை.
ஆனால் ரசிகர்கள் இந்த தலைப்பு தான் இருக்கும் என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர். இந்த 65வது படத்திற்கு டார்கெட் என்று பெயர் வைத்துள்ளனர்.
தளபதி விஜய் கோட் சூட் அணிந்து கெத்தாக அமர்ந்திருக்கும் அந்த போஸ்டர் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதை பார்த்த அஜித் ரசிகர்கள் போஸ்டர் எல்லாம் ஓகே தான் ஆனால் என் வெஸ்டன் டாய்லெட் போய் உட்கார வச்சுட்டாங்க என கலாய்த்து வருகின்றனர்.

இந்த படத்தின் தலைப்பு கண்டிப்பாக தளபதியின் பிறந்த நாளன்று, வரும் 22ஆம் தேதி வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.