மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பது, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் தளபதி 65 படத்தை தான்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆனது ஜூன் 22 அன்று ரிலீஸ் செய்ய உள்ளதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது.
மேலும் இந்த படத்தை இரண்டே மாதத்தில் எடுத்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி மார்ச் மாதம் துவங்கி தளபதி65 படத்தின் படப்பிடிப்பு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து திரைபடம் திரையிட தயாராகிவிடுமாம்.
அதற்கு தகுந்தாற்போல் தளபதி65 படத்திற்கு வெறும் 55 முதல் 60 நாட்கள் மட்டுமே கால்சீட் கொடுத்துள்ளாராம். அதாவது கிட்டதட்ட 2 மாதம் மட்டுமே.
சமீபகாலமாக விஜய், தான் நடிக்கும் படங்களுக்கு 100 நாட்கள் வரை கால்ஷீட் கொடுத்து வந்த நிலையில், தளபதி65 படத்திற்கு வெறும் 60 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளது, தளபதியின் அடுத்தடுத்த படத்தின் ரிலீஸுக்கான வேகத்தை குறிக்கிறது.
முடிந்தவரை தளபதி65 படத்தை இந்த ஆண்டு ஆயுத பூஜைக்கு வெளியிட வேண்டுமென தளபதி கட்டளையின் படி, சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்து உள்ளர்கலாம். இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.