சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

24 மணி நேர போட்டோஷூட்.. தளபதி விஜய்யின் பிறந்தநாளை டார்கெட் செய்யும் படக்குழு!

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்காக விஜய்யை வைத்து ஒரு பிரம்மாண்டமான போட்டோ ஷூட் சமீபத்தில் நடத்தப்பட்டுள்ளது.

விஜய் இதற்கு முன்பு நடித்த திரைப்படங்களில் எல்லாம் இதுபோன்று போட்டோ ஷூட் விமரிசையாக நடத்தப்பட்டது கிடையாது. மாஸ்டர் திரைப்படத்தில் கூட லோகேஷ் கனகராஜ், விஜய் அவருடைய ஆபீஸுக்கு வரும்போது கேஷுவலாக போட்டோ ஷூட் செய்து இருந்தார்.

ஆனால் வம்சி இந்த போட்டோ ஷூட்டுக்காக தனியாக விஜய்யிடம் ஒரு நாள் கால்ஷீட் பெற்றிருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட பலரும் போட்டோ ஷூட் செய்வதற்கு தனியாக கால்ஷூட்டா என்று வியந்து வருகின்றனர். ஆனால் இதற்குப் பின்னால் ஒரு சிறப்புக் காரணமும் இருக்கிறது.

வரும் ஜூன் 22 அன்று விஜய்யின் பிறந்த நாள் வருகிறது. அந்த நாளில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. சாதாரணமாக விஜய் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவருகிறது என்றாலே ஒரு ஆர்வம் ரசிகர்களிடம் இருக்கும்.

அதுவும் அவரின் பிறந்த நாளில் வெளியாகிறது என்றால் அதற்கு ஏற்றவாறு போஸ்டர் மாஸாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இப்படி பிரமாண்டமாக ஏற்பாடு செய்து போட்டோ ஷூட் நடத்தப்பட்டுள்ளது. தற்போது நடத்தப்பட்டிருக்கும் அந்த போட்டோ ஷூட் மிகவும் பிரமாதமாக வந்திருக்கிறதாம். இதனால் தளபதியின் பிறந்தநாளை போஸ்டருடன் கொண்டாடுவதற்கு விஜய்யின் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Trending News