ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியிட்டு படக்குழுவினர் தெறிக்க விட்டனர். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பூஜா ஹெக்டே ஜோடியாக தளபதி விஜய் நடித்து வருகிறார்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும், சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய்க்கு மாஸ்டர் படத்தில் 80 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டது.
தற்போது பீஸ்ட் படத்திற்காக தளபதி 100 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது.

இந்த படத்திற்காக சென்னையில் ஒரு ஷாப்பிங் மாலை உருவாக்கி வருகின்றனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வைத்து பார்க்கும் போது அதிரடி சண்டைக் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது தளபதியின் அடுத்த படத்தின் அப்டேட் வந்த வண்ணம் உள்ளது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு படத்தை தயாரிக்க, வம்சி பைடிபள்ளி இந்த படத்தை இயக்க போகிறாராம். இப்படம் விஜய்யின் 66வது படமாக அமைய உள்ளது.
இந்த படத்தை சம்பளம் மட்டும் 100 கோடியை தாண்டும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது படத்தின் பட்ஜெட்டில் பாதியாக கூட இருக்கலாம். மாஸ்டர் படத்தின் போது வருமான வரி சோதனை போட்டு தளபதி விஜய்யிடம் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லாமல் திரும்பி சென்றனர்.
தற்போது 100 கோடி சம்பளம் என்பதால் இது போன்ற பிரச்சினைகளை தளபதி அசால்டாக சமாளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த வருடம் வருமான வரி சோதனை நடைபெற்றது அடுத்த நாளே ஒரே செல்ஃபியால் ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்த தளபதி விஜய்.
