சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

தளபதி 66 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படம்.. கண் கலங்கிப் போயிருக்கும் வம்சி

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தற்போது தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் வம்சி இயக்கும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து வரும் இந்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து உருவாகிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தை வம்சி, விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் பார்த்து பார்த்து எடுத்து வருகிறார்.

வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாளன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை படக்குழு தற்போது பரபரப்பாக செய்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் தளபதி 66 பட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அழகான தோட்டம் ஒன்றின் நடுவில் இருக்கும் வீட்டில் இருந்து விஜய் வெளிவருவது போன்று இருக்கிறது. இந்த போட்டோவை பார்க்கும் போதே படத்தில் அழகான குடும்ப சென்டிமெண்ட் காட்சிகள் இருக்கும் என்று தெரிகிறது.

இந்த படம் சம்பந்தப்பட்ட எந்த விஷயங்களும் வெளியில் கசிந்த விடாதபடி இயக்குனர் மிகவும் கவனமாக இயக்கி வருகிறார். ஆனால் எப்படியோ இந்த போட்டோ சோசியல் மீடியாவில் வெளியாகிவிட்டது. இதனால் படக்குழுவினர் தற்போது மிகுந்த அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

இது படத்தின் கதை சம்பந்தப்பட்ட பல யூகங்களுக்கு வழிவகுக்கும் என்று இயக்குனர் மிகுந்த கவலையில் இருக்கிறாராம். அதனால் இனி வரும் நாட்களில் இன்னும் கூடுதல் கவனத்துடன் படப்பிடிப்பை நடத்துவதற்கு இயக்குனரும், தயாரிப்பாளரும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

thalapathy66-vijay
thalapathy66-vijay

Trending News