வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தளபதி.. லீக்கான தளபதி- 66 புகைப்படங்கள், புலம்பும் வம்சி

தளபதி நடிப்பில் வம்சி இயக்கிக்கொண்டிருக்கும் தளபதி 66 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்.

மேலும் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, குஷ்பு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தப் படம் பற்றிய அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தளபதி 66 திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. மேலும் விஜய் மாஸாக இருக்கும் அந்த போட்டோ ட்விட்டர் தளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது.

பொதுவாக முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் ஷூட்டிங் ஸ்பார்ட் போட்டோக்கள் அவ்வளவு எளிதில் வெளிவர முடியாதபடி ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கும். அதேபோன்றுதான் இயக்குனர் வம்சி இந்தப் படத்திற்கும் பல பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்தி இருந்தார்.

அதன்படி படப்பிடிப்பு தளத்தில் யாரும் செல்போன் உபயோகிக்க கூடாது என்ற கட்டுப்பாடும் இருந்தது. ஆனால் அதையெல்லாம் மீறி எப்படியோ அந்த போட்டோ வெளியானது. இதனால் இயக்குனரும், தயாரிப்பாளரும் கடும் அப்செட்டில் இருந்தனர்.

vijay
vijay

இந்நிலையில் அவர்களை மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து மற்றொரு போட்டோ ஒன்று கசிந்துள்ளது. அதில் விஜய்யுடன் ஹீரோயின் ராஷ்மிகா இருக்கிறார். இந்த போட்டோவை பார்க்கும் போது அவர்களின் காதல் சம்பந்தப்பட்ட காட்சிகளாக இருக்கும் என்று தெரிகிறது.

தற்போது வெளியாகியிருக்கும் இந்தப் புகைப்படத்தால் படக்குழு கடும் அதிர்ச்சியில் இருக்கிறது. மேலும் இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் இன்னும் கொஞ்சம் அதிக பாதுகாப்பு போடுமாறு கூறி வருகின்றனர்.

Trending News